tamilnadu

img

பெரிய தேவை -

அதிகாலை அந்தவீடு அழுதோய்ந்தி ருந்தது. சிதறிக்கிடந்த சேர் களில் நித்திரைகட்டிய சோர்வோடு  அங்குமிங்கென ஆட்கள் அமர்ந்திருந்த னர். வீட்டிற்கு முன்பாகப் போடப்பட்டி ருந்த பெரிய தகரப்பந்தலுக்கு நடுவே  கண்ணாடிப்பேழைக்குள் கிடத்தப்பட்டி ருந்த காயாம்பூவை தூரத்திலிருந்தே பார்த்தான் ராமன். சைக்கிளையும் செருப்பையும் ஓர மாக இறுத்திவிட்டு மாலையை வெளி யெடுக்க பிடியிலிருந்த நெகிழிப்பை விடு தலை உணர்வோடு காற்றில் பறந்து அங்கு  விரவிக்கிடந்த தன் இனத்தோடு இணக்க மானது. கையில் பிடித்திருந்த மாலை யோடு பிரிஷர் பாக்ஸ் அருகில் சென்ற தும் குழுமியிருந்த பெண்கள் ஒருக்க ணித்துக்கொள்ள மாலையை போட்டு கொஞ்சம் விலக்கி முகத்தை நன்றாகப் பார்த்து கும்பிட்டுவிட்டு சேரில் வந்தமர்ந்த வனை காயாம்பூ மகன் தங்கராசு பார்த்து தலையை சன்னமாக ஆட்டினான். ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்க்கும் ராமன் அசராத உழைப்பிலும் பழக்கவழக்கத்திலும் குடும்பத்தை நிர்வ கிப்பதிலும் பாண்டித்தியம் பெற்றவன் என்றளவிற்கு பண்பும் பக்குவமும் பெற்ற வனாய் இருந்தான். எப்போதும் துருதுருன்னு இருக்கு மவன் தன்வருவாய்க்குமேல் கடனின்றி வாழ்தலின் திறனோடிருந்தான். சாடிக்கேத்ததாய் மனைவியும் இருந்த தால் அக்கம் பக்கங்களில் வாரம் மாத மென பல குழுக்களில் வட்டிக்கு பணம்  பெற்று ரெண்டே நாளில் திட்டமின்றி விரயம்  செய்துவிட்டு கட்டமுடியாமல் குழுக்காரன்  வந்ததும் வீடுவீடாக ஐந்திற்கும் பத்திற்கும்  அலையும் குடும்பஸ்திகள் பலருக்கும் சலம்பாமலிருக்கும் இவர்களின் மேல் எப்போதும் ஒரு கண்ணிருக்கும். கல்லூரிப் படிப்பிற்கு ஆசைப்பட்ட வனுக்கு முடியாமல்போக பனிரெண்டா வதோடு முழுக்குப்போட்டுவிட்டு வேலைக்குச் சென்றவன்தான் ஓடிக் கொண்டிருக்கின்றான். வாய்ப்புகிட்டும் கணங்களில் வீட்டு இடத்தில் செடிகள்  வைத்து பராமரிப்பது தன் குழந்தை களோடு அளவளாவி அவர்களோடு புத்த கம் வாசிப்பது வாசிப்பின் முக்கியத்து வம் கல்வியின் அவசியம் குறித்தும் அவர்களின் போக்கிலே உரமூட்டுவதென எப்போதும் நேரத்தை பயனுள்ளதாக்கிக் கொள்ளவிரும்பும் அவன் தனக்குத்தெரி யாதது எதுவாகினும் அதை மழலை அறிந்திருப்பினும் கேட்டுக் கொள்ளும் தெளிவு உடையவனாய் ராமனிருந்தான். தற்சமயம் வெளியூரிலிருந்து உறவு கள் கார் மற்றும் ஆட்டோவிலும் வரத் தொடங்க அரசியல் பிரமுகர்களும் மாலை  மிடுக்கோடு வந்தவர்களை இருந்தவர்கள் பதறியபடி வரவேற்றிருந்தனர். நெஞ்சிலடித்து ஓலமிட்டபடி நடைவேக மாக வந்த சுற்றுவட்டாரப்பெண்கள் கை களை விரித்து உடல் சிணுங்கியடி ஓவென  ஓலமிட்டபடி அருகில் வந்து அங்கிருந்த  பெண்களை தொப்பென கட்டியணைத்து ஒப்பாரி வைப்பதைக் கண்டபடி இருந்த வனுக்கு நேரமாக பசி கிள்ளத்தொடங்க எழுந்து அடுத்த தெருவிலிருக்கும் தனது  வீட்டுக்கு சைக்கிளோடு வந்து சேர்ந்தான்.

ஏங்க கேதத்துல கூட்டமாவா இருந்துச்சு உங்களப்பாத்தாங்களா அதான் உங்க சினேகிதர் தங்கராசு பேசுனாரா.. சோற்றை மென்றபடி கூட்டமில்ல காலை நேரம்தானே இனிமேத்தான் வரு வாங்க ,எல்லாரும் பாத்தாங்க பாத்த தும் ஓடிவந்து கைகால உருவி வர வேற்க நாமயென்ன அவங்களுக்கு வொர்த்தான ஆளா. சரித்தான் என்றபடி கூடவே ‘ச் கொட்டிக்கொண்டவன் சாப்  பிட்டதும் இன்னைய பொழப்பு எனக்கு அங்கெதான். சரி பாத்துக்க வாரேன் என்ற வாறு சைக்கிளோடு வந்து சேர்ந்தான். தற்போது அந்த பகுதி முச்சூடும் விழாக்கோலம் பூண்டிருந்தது. கொட்டுச் சத்தமும் கரகாட்ட கோஷ்டியின் ஆட்டம்  பாட்டமும் வேடிக்கைபார்க்கும் குடி மகன்களின் கேளிக்கைகளோடு சம்பிரு தாய சவரட்டணைகளோடு சாதிசனமென புடைசூழ பொறந்த மக்களும் தேம்பியழ வருகிற உறவுக்காரர்கள் பலரும் சட்டையை கழற்றியபடி இன்னும் சிலர் இடுப்பில் துண்டை இறுகக் கட்டியபடி வெறுமேலோடு வர வந்தவர்களை வரிசை யாக நின்ற அங்காளி பங்காளிக ளெல்லாம் அவர்களும் வெற்றுடலோடு தொட்டுக்கொடுத்தபடி வரவேற்க, பலர்  துக்கத்திற்கு வந்தவர்களைவிட சாதிய  கலாச்சார மிடுக்குகளை காட்ட வந்த வர்களாகவே தெரிந்தது, இந்தச் சம்பிராத வழமையை பண்ணெடுங்காலமாக பார்த்தவனுக்கு இது நமக்கெதுக்கென பலமுறை இருந்தாலும் தொண்டைக்குள் சிக்கிய முள்ளாக தொக்கியே நின்றது வினா. அங்கே மலர்ந்து கிடந்தாலும் மலர்  களில் செழிப்பில்லை. மணத்தே கிடந்தா லும் மனமதை ஏற்பதாகவும் இல்லை. நிகழ்வுகளை வைத்துதான் மலர்களும் அங்கே மதிக்கப்படுகிறது.

தெருவெங்கும் பிளாஸ்டிக்கூடுகளும் உதிர்ந்த பூக்களும் வெடித்துச்சிதறிய மருந்துக்காகிதங்களும் கார்வண்டி பைக்குகளும் பார்க்குமிடமெங்கும் அலைமோதும் சனங்களும் பரபரப்பும் விறுறுப்புமாய் புழுதிபறித்திருக்க அந்தப்பகுதி ஒரு ரசாயன மாற்றத்தோடு நாசி துளைத்திருந்தது அந்தப்பெரும்புள்ளியின் வீட்டுத்தெரு.பொழுது மதியத்தை முந்தியிருக்கிற நேரம் சொர்க்கரதம் வர மலையாய் குவிந்திருந்த மாலைகளை எடுத்து  சோடனை செய்து இறுதிக்கட்டவேலை யை ஆளுக்கொரு பேராக செய்து கொண்டிருந்தனர். உச்சிவெயில் மரநிழலில் ஓரமாய் அமர்ந்தவர்களோடு ராமனும் போய் உட்கார அந்த நேரத்தில் என்னப்பா ராமா  நல்லாருக்கியா. ஆளே பாக்கமுடியு தில்லையே என்று கேட்டபடி வந்தான் அதே  தெருவைச்சேர்ந்த  ஆனந்தன்.  நல்லாருக்கேண்ணே நீங்க எப்படி இருக்கீங்க.. ம் என்றான். ராமனைவிட ஐந்தாறுவயது மூப்பி ருக்கும் ஆனந்தனுக்கு எப்போதும் மூக்கு  வியர்த்தபடியிருக்குமவன் எந்த இடத்திலும் வம்பளக்கும் வல்லமை பெற்ற வன். வாங்க இப்டி ஒக்காருங்கண்ணே ராமன்சொல்ல ஓரமாய்க்கிடந்த ஒரு கல்லை தூக்கி வந்து அதிலமர்ந்தான் ஆனந்தன். தற்சமயம் கேதவீடு உச்சக்கட்டத்திலி ருந்தது இவனுக்குள்ளிருந்த கேள்வியும் அப்படியே வெளிவரத்தொடங்கியது. அருகிலிருந்த ஆனந்தனிடம் அண்ணே என்னடா தம்பி இப்பிடி கேக்குறேனு தப்பா நெனச்சுக்காதீங்க சும்மா கேக்கனும்னு தோணுச்சு  உங்க சொந்தக்காரங்க எல்லாரும் சட்டைய கழட்டிட்டு வெறுமேலோடு வர்றாங்களே ஏண்ணே? ஏங் இதுக்கு முன்னாடி இப்படி பாத்ததில்லையா பாத்திருக்கேன் இப்படி யாருக்கிட்டே யும் கேட்டதில்லண்ணே

அது இறந்தவருக்கு நாம செய்யிற மரியாதிதான்டா குறிப்பா எங்க சனத்துல இப்புடித்தான் நடக்கும். அப்பிடியில்லண்ணே நெறையா சாதிசனத்துல இப்புடித்தான் நடக்குது நான் பாத்திருக்கேன் ஓ..அப்பிடியா  நிர்வாணத்தோடு திரிஞ்ச நாம மரி யாதைக்குத்தானே உடுப்ப கண்டோம் இப்ப அதை பொதுஇடத்துல கழட்டிட்டு  எந்த மரியாதையை காப்பாத்தப் போறோம்னு இழுத்தவனிடம் அட தொன்றுதொட்ட பழக்கம்டா செஞ்சிட்டுப்போகட்டுமே உனக்கென்ன இப்ப  ஆனந்தனின் குரலோ உஷ்ணத்தி லிருக்க... கேள்விக்கான பதில் இதுவல்ல வென ராமனுக்குப்பட்டதும் அது மரி யாதையின்னு நீங்க சொன்னா ஆம்பி ளங்கப்போல பொம்பிளைங்களுக்கும் அது பொருந்துந்தானே எனக்கேட்கத் தோன்றியதை அமிழ்த்தி விருட்டென எழுந்தான்.

;