மதுரை, செப்.21- மதுரையில் உள்ள சிபிஎஸ்-இ பள்ளியில் கடந்த மூன்று தினங்க ளுக்கு முன்பு ஆறாம் வகுப்பு மாண வர்களுக்கு சமூக அறிவியல் தேர்வு நடைபெற்றுள்ளது. தேர்வில் “மும்பை மாகாணத்தில் எந்த சாதி தீண்டத் தகாத சாதியாக இருந்தது” என்ற கேள்வி கேட்கப்பட்டுள்ளது. இதற்கு மூன்று விடைகள் கொடுக் கப்பட்டுள்ளன. அவை 1.”மஹர்”, 2.”நாயர்” 3.”கோலி”. இந்தக் கேள்வி எதனடிப்படை யில் கேட்கப்பட்டது என்பதை ஆய்வு செய்தபோது ஆறாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் Diversity and Discrimination என்ற தலைப்பின் கீழ் 19-ஆம் பக்கத்தில் இது தொடர் பான விவரங்கள் உள்ளன. இது குறித்து சம்பந்தப்பட்ட பள்ளியை தொடர்பு கொண்டு கேட்ட போது, “பாடப்புத்தகத்தில்” உள்ள விவரங்களின் அடிப்படையில் தான் கேள்வித்தாள் தயாரிக்கப்பட்டது என விளக்கமளித்தனர். “சாதிகள் இல்லையடி பாப்பா” என தமிழக அரசு உரக்கச் சொல்லி வருகிறது. ஆனால், ஒன்றிய அர சின் கட்டுப்பாட்டில் உள்ள சிபிஎஸ்இ பள்ளி பாடப்புத்தகத்தில் இது போன்ற கேள்விகள் கேட்கப்பட வேண்டுமென்றே பாடத்திட்டங் களை உருவாக்கியிருக்கிறார்கள் போலும். பிஞ்சுகளின் மனதில் சாதி யம் என்ற நச்சுவிதையை ஊன்று பவர்களை என்ன சொல்வது? நமது நிருபர்