மதுரை:
தில்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புதனன்று தமிழகம் முழுவதும் மூன்றாவது நாளாக மறியல்போர் நடத்தியது.மதுரை மாவட்டத்தில் சோழவந்தான் பாரத ஸ்டேட் வங்கியை முற்றுகையிட்ட வாடிப்பட்டி ஒன்றியச் செயலாளர் ஏ.வேல்பாண்டி, மாநிலச் செயற்குழு உறுப்பினர் ஏ.லாசர், பொன் ராஜ், புருசோத்தமன், கருப்பசாமி உள்ளிட்ட பலர்கலந்துகொண்டனர்
தே.கல்லுப்பட்டி தபால் அலுவலகத்தை மறித்து மறியல் செய்த வி.சமயன், மாவட்டச் செயலாளர் சி.ராமகிருஷ்ணன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் கே.அரவிந்தன், பா.ரவி, சி.மணிக்கிருஷ்ணன், இரா.காரல்மார்க்ஸ், பி.முருகன், எஸ்.தனலெட்சுமி, பி.ராமகிருஷ்ணன், உள் ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.அலங்காநல்லூரில் ஒன்றியச்செயலாளர் வி.உமாமகேஸ் வரன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.கே.பொன்னுத்தாய், எஸ்.ஆண்டிச்சாமி, என்.ஸ்டாலின்,எம்.ஆறுமுகம், கௌசல்யா உள் ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
சிவகாசி
வகாசி ஸ்டேட் வங்கியை முற்றுகையிட்ட கட்சி நகர் செயலாளர் கே.முருகன், கணேசன், மாடசாமி, ராமமூர்த்தி, அய் யாச்சாமி, ஜோதிமணி, சரவணன்உள்ளிட்ட உள்ளிட்ட பலர் லந்துகொண்டனர்.இராஜபாளையம் சத்திரப் பட்டி அஞ்சல் அலுவலகத்தை முற்றுகையிட்ட கட்சியின் ஒன்றியச் செயலாளர் முனியாண்டி, முருகேசன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் கணேசன் ஜோதிலட்சுமி மற்றும் ராமசுந்தரம் சக்திவேல் முத்துச்செல்வி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.முற்றுகை-மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.