“காதலுக்காக எதையும் செய்வேன்”-காதலர்களின் ஆண்டாண்டு கால காவிய வாக்கியம் இது. பணியாற்றும் நிறுவனத்தின் நோக்கத்தை,காதலுக்காக சிதைக்கலாமா? “ஆல் தி ஓல்ட் நைவ்ஸ்” என்ற ஹாலிவுட் படம் மேற்கண்ட கேள்விக்கான பதிலை மாறுபட்ட கோணத்தில் சொல்கிறது.
விக், அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ யின்,வியன்னா பிரிவின் தலைமை அதிகாரி. ஹென்றி மற்றும் சீலியா இங்கு உளவாளி யாக பணிபுரிகின்றனர். இவர்கள் இருவரும் நெருக்கமான காதலர்கள். ஹென்றி ஒரு காலத்தில் மாஸ்கோவில் சிஐஏ-க்காக பணியாற்றிய போது இலியாஸ் என்ற இஸ்லாமிய நண்பனுடன் தொடர்பில் இருந்தான்.இவனை உளவுக்கும் பயன் படுத்தினான்.மாஸ்கோ அரசு இலியாஸை கைது செய்ய,ஹென்றி அவனைக் காப் பாற்றாமல் நட்டாற்றில் விடுகிறான்.ஹென்றி மீதான கடும் கோபத்தோடு தன் சொந்த நாடான ஈரானுக்கு தப்பிச் செல்கிறான் இலி யாஸ்.ஈரானின் மீது அமெரிக்கா விதித்த தடை யால்,தனது மகளின் மருத்துவ சிகிச்சைக்கு வழியின்றி மகளையும் இழக்கிறான். தீவிர வாதியாகிறான். 2012இல் வியன்னாவுக்கு வரும் இலியா ஸின் ரகசிய வழிகாட்டுதலோடு,127 பேர் பய ணிக்கும் துருக்கி விமானம்,இஸ்லாமிய தீவிர வாதிகளால் ஆஸ்திரிய மண்ணில் கடத்தப்படு கிறது. ஆஸ்திரியா,ஜெர்மனியிலுள்ள இஸ்லாமிய தீவிரவாதிகளை விடுவிக்க வேண்டுமென்பதும் கடத்தல்காரர்களின் கோரிக்கை. விக் தலைமையிலான சிஐஏ, வியன்னா பிரிவு,விமானக் கடத்தலை முறியடிக்க சுறு சுறுப்பாகச் செயல்படுகிறது. கடத்தப்பட்ட விமானத்தில் சிஐஏயின் ஒற்றனொருவன் பயணியாக உள்ளான்.அவன் மூலம் விமா னத்திற்குள் நடைபெறும் தாக்குதல்கள் உள்ளிட்ட நிகழ்வுகள் சிஐஏ-க்கு ரகசியமாக கிடைக்கிறது. இதற்கிடையே கடத்தல் தொடர்பான புதிய தகவல்களை சேகரிக்க சீலியா, நகரிலுள்ள இஸ்லாமிய குழுவை தனியாக சந்திக்கிறாள்.இதே நேரத்தில் ஹென்றியும், இலியாஸை ரகசியமாக சந்திக்கிறான். இவர்களது சந்திப்பிற்கு பின், விமா னத்தில் உள்ள ஒற்றன் கடத்தல்காரர்களால் அடையாளம் காணப்படுகிறான்.அவன் சுடப்பட்டு விமானத்திலிருந்து தூக்கி எறியப்படுகிறான்.
மேலும் ஆஸ்திரியா,ஜெர்மன் அரசுகள் கோரிக்கையை நிறைவேற்றாமல் காலம் கடத்துகிறது.கோரிக்கை நிறைவேறாத சூழலில், சிஐஏயின் ரகசிய எதிர் நட வடிக்கையில் வெறுப்படைந்த தீவிரவாதி கள் தற்கொலைப் படையாக மாறி விமா னத்தில் உள்ள அனைவரையும் விஷவாயு மூலம் சாகடிக்கிறார்கள். இக்கடத்தல் விவகாரத்தில், விமானத்தில் சிஐஏ ஒற்றன் இருப்பதை ஹென்றி காட்டி கொடுத்திருப்பான் என்று அவனது செல்பேசி யில் உள்ள ஈரான் நாட்டு போன் குறியீட்டு எண்ணை வைத்து சந்தேகப்படுகிறாள் சீலியா. ஹென்றியை துரோகியாகப் பார்க்கிறாள். எதுவும் அவனிடம் தெரிவிக்காமல், காதலை துறந்து நிரந்தரமாகப் பிரிகிறாள்.சிஐஏ வேலையையும் உதறுகிறாள். கலிபோர்னி யாவில் வேறொருவரை திருமணம் செய்து புதிய வாழ்க்கையை நடத்துகிறாள். ஆனால் ஹென்றியோ, சீலியாவின் நினைவிலேயே சிஐஏயில் பணியைத் தொடர்கிறான். சிஐஏ, இக்கடத்தல் தொடர்பான அடுத்த கட்ட நகர்வுக்கு துப்பு ஏதும் கிடைக்காத தால்,கோப்பினை அப்படியே(abrupt)முடிவு கட்டுகிறது.
காலம் நகர்கிறது. 2020இல் ஆப்கா னிஸ்தானில் இலியாஸ் சிஐஏ-வால் பிடி படுகிறான். சிஐஏயின் சித்திரவதைகளுக்கி டையே,துருக்கி விமான கடத்தல் தொடர் பான சில முக்கிய தகவல்களை சொல்லி விட்டுச் சாகிறான். சிஐஏ விழித்துக் கொள்கி றது. தூசி தட்டிய கோப்பை மீண்டும் திறக்கி றது.இலியாஸ் கொடுத்த துப்பால், சிஐஏ யின் சந்தேகப்பார்வை பழைய காதலர்களான ஹென்றி, சீலியா பக்கம் திரும்புகிறது. இரு ரகசிய குழுக்களை அமைக்கிறது. ஒரு குழு ஹென்றிக்கும், மற்றொரு குழு சீலி யாவுக்கும் உதவ ஏற்பாடாகிறது. இந்த இரு குழுக்களின் செயல்பாடும் ஒன்றுக்கு ஒன்று தெரியாது. இக்குழுவின் வேலை, காத லர்களில் யார் விமானத்திலிருந்த சிஐஏ ஒற் றனை காட்டிக் கொடுத்த கறுப்பு ஆடு என் பதை இவர்களின் உரையாடலை மறைவிலி ருந்து கண்டறிந்து;அவர்களை அங்கே தீர்த்துக் கட்டுவது.
சிஐஏ தலைமை அதிகாரி விக்கின் ஏற் பாட்டின்படி, இரு குழுக்களின் ரகசிய மேற்பார்வையில்,ஹென்றி மற்றும் சீலியா கலிபோர்னியாவில் உள்ள கடற்கரை விடுதி யில் சந்திக்கிறார்கள்.நீண்ட உரையாட லைத் துவக்குகிறார்கள். பழைய காதல் நினைவுகளை ஏக்கத்தோடு ஞாபகப் படுத்திக் கொள்கிறார்கள்.விமானக் கடத்த லில் நடந்த 127 உயிர்ப் பலிக்கு ஹென்றி யின் துரோகமே காரணமென குற்றம் சுமத்து கிறாள் சீலியா.ஹென்றியோ உண்மைக் கார ணத்தை முதல்முறையாக உடைக்கிறான்.அந்த உண்மை என்ன? சிஐஏ பார்வையில், இருவரில் யார் கறுப்பு பலி ஆடு? காதலை வாழ வைத்தவர் யார்? பட முடிவில் இப்புதிர் விடுவிக்கப்படுகிறது.படம் முடிந்தும்,பல மணித்துளிகள் முடிவைப் பற்றியே அசை போட வைத்துள்ளதே இப்படத்தின் சிறப்பு. நீண்ட உரையாடலின் இறுதியில், இரு வரில் யாரோ ஒருவர் மரணித்தே ஆக வேண்டிய சூழலில்;உண்மைக் காதலை அழுதுகொண்டே உடல்மொழியில் வெளிப் படுத்தி, அட்டகாசமான நடிப்பை தந்துள்ள னர் சீலியாவாக நடித்துள்ள டாண்டைவ் நியூடனும், ஹென்றியாக நடித்துள்ள கிரிஷ் பைனும். கதை நகர்வோடு பார்வையா ளர்களையும் இணைத்து,கதையின் கருப்பொருளை தாங்கியபடி பவனி வரும் தங்க ரதமாக பின்னணி இசைக் கோர்வை அமைந்துள்ளது. கதை ஓரடி முன்னுக்கு நகருகையில்;ஈரடி ஃப்ளாஷ் பேக் சென்று கதையை மேலும் சுவாரசியமாக நகர்த்தி பார்வையாளர்களை இருக்கையில் நிமிர்ந்து உட்கார வைத்துள்ளனர் படத்தொகுப்பாளர்கள். பசுமையான கலிபோர்னியா கடற்கரை சாலைகளையும்;ஃப்ளாஷ் பேக் காட்சிகளில் மாறும் காலச்சூழலை வண்ணங்களை மாற்றி சிறப்பாகப் படமாக்கியுள்ளனர் ஒளிப்பதி வாளர்கள் ப்ருனஷ் மற்றும் கிறிஸ்டென்ஸன். இப்படப் பெயரிலே நாவல் எழுதிய ஒலன் ஸ்டீன்ஹானரே இப்படத்திற்கு வளைந்து நெளிந்து செல்லும் திரைக்கதையை புதிய பாணியில் எழுதியுள்ளார். காதலை இவ்வளவு திறம்படச் சொல்லிய விதத்திலும்,அதேநேரம் அமெரிக்க உளவு நிறுவனமான சிஐஏயின் ஈவு இரக்கமற்ற கொடூர முகத்தை காட்டிய வகையிலும் இயக்குநர் ஜான்ஸ் மெட்ஷ் உயர்ந்து நிற்கிறார். 2022 இல் வெளியான இப்படத்தை ப்ரைம் அமேசானில் தமிழ் வசன வரிகளோடு காண லாம்.