tamilnadu

img

அருந்ததியர் வீடுகளை அபகரிக்க முயலும் இந்து முன்னணி! நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த எல். முருகன் குரல் கொடுப்பாரா?

அருந்ததியர் வீடுகளை அபகரிக்க முயலும் இந்து முன்னணி! நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த எல். முருகன் குரல் கொடுப்பாரா?

சென்னை,  ஜன. 9 - அருந்ததியர் மக்களின் வீடுகளை அபகரிக்கும் இந்து முன்னணியின் சட்ட விரோத முயற்சியை ஒன்றிய அமைச்சர் எல். முருகன் கண்டிக்கத் தயாரா? என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக பெ. சண்முகம், தமது சமூகவலைதளப் பக்கத்தில் கூறியிருப்பதாவது: “திருப்பூர் மாவட்டத்தில் 120 அருந்ததியர் குடும்பங்களுக்கு 1994-ஆம்  ஆண்டு அரசு வீட்டுமனை பட்டா வழங்கி யது. அப்போது அங்கு குன்றும் இல்லை,  முருகனும் இல்லை. ஆனால், அந்த நிலத்தை ‘கோவில் இடம்’ என்று, அருந்ததியர் மக்களுக்கு எதிராக இந்து முன்னணி கும்பல் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. நீதிமன்றம் அந்த வழக்கை தள்ளுபடி செய்து விட்டது. இதனடிப்படையில், அருந்ததியர் மக்களுக்கு வழங்கப்பட்டிருந்த இடத்தை அபகரிக்கும் நோக்கத்தோடு ‘கோவில்’ என்ற பெயரில் போடப்பட்டிருந்த கூரை யை, ஜனவரி 7-ஆம் தேதி நீதிமன்ற உத்தர வுப்படி மாவட்ட நிர்வாகம் அப்புறப்படுத்தி யுள்ளது. ஆனால், இந்து முன்னணி குண்டர்கள் நீதிமன்றத் தீர்ப்பை மதிக்கா மல் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். அருந்ததியருக்கு அரசால் வழங்கப்பட்ட வீட்டுமனையை அபகரிக்க முயற்சிக் கிறது இந்து முன்னணி. இந்தப் பிரச்சனையில் ஒன்றிய அமைச்சர் முருகன் யார் பக்கம்?; நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வேண்டும் என்று சொல்வாரா?” இவ்வாறு பெ. சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார்.