மலைவாழ் மக்கள் சங்க வட்ட மாநாடு
தருமபுரி, ஆக.31- மலைவாழ் மக்கள் சங்க பாப்பிரெட்டிப்பட்டி வட்ட மாநாட் டில் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்ட 3 ஆவது மாநாடு, ஞாயிறன்று பாப்பி ரெட்டிப்பட்டியில் வட்டத் தலைவர் ஆர்.ஜெகநாதன் தலை மையில் நடைபெற்றது. வட்டக்குழு உறுப்பினர் டி.மணிவண் ணன் வரவேற்றார். மாவட்ட துணைத்தலைவர் செல்வி அஞ் சலி தீர்மானத்தை வாசித்தார். மாநில துணைச்செயலாளர் ஏ. கண்ணகி துவக்கவுரையாற்றினார். வட்டச் செயலாளர் கே. பழனிச்சாமி அறிக்கையை முன்வைத்தார். மலைவாழ் மக்கள் சங்க மாவட்டத் தலைவர் ஏ.அம்புரோஸ், சிபிஎம் வட்டச் செயலாளர் தி.வ.தனுஷன், விவசாயிகள் சங்க வட்டத் தலை வர் எஸ்.தீர்த்தகிரி, செயலாளர் சி.வஞ்சி, குருமன்ஸ் சங்க மாவட்டத் தலைவர் சி.சொக்கலிங்கம் உள்ளிட்டோர் வாழ்த் திப் பேசினர். இம்மாநாட்டில், ஆவாரங்காட்டூர் பழங்குடி மக்க ளுக்கு வீட்டு மனை பட்டா, மின்சார வசதி செய்துதர வேண்டும். வாச்சாத்தி வன்கொடுமை தாக்குதலுக்குள்ளான அனைத்து பழங்குடி குடும்பத்தினருக்கும் அரசு வீடு, நிலப்பட்டா, சுய வேலைவாய்ப்பு பயிற்சி மற்றும் மானியத்துடன் தொழில் கடன் ஆகியவை வழங்க வேண்டும். வாணியாறு அணைக்கு நிலம் கொடுத்து பாதிக்கப்பட்ட பழங்குடி மக்களின் அனுபவ நிலங்களுக்கு பட்டா வழங்க வேண்டும், உள்ளிட்ட தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து, சங்கத்தின் வட் டத் தலைவராக எம்.மணிவண்ணன், செயலாளராக வரதரா ஜன், பொருளாளராக சந்தோஷ் குமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்டச் செயலாளர் கே.என்.மல்லையன் நிறைவுரையாற்றினார்.
