tamilnadu

மலை கிராம அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களை நியமித்து, பணியாற்றுவதை உறுதிப்படுத்துக!

ஈரோடு,டிச.11-  மலை கிராமங்களிலுள்ள அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்களை முழுமையாக நிரப்பி, முழுமையாக பணியாற்றுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்று மலைவாழ் இளைஞர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு மலைவாழ் இளைஞர் சங்கத் தின் மாநிலக்குழுக் கூட்டம் ஈரோட்டில் மாநி லத் தலைவர் எம்.சடையலிங்கம்தலைமையில் நடைபெற்றது. வாலிபர் சங்க  மாநிலச் செயலா ளர் எஸ்.பாலா, மாநிலத் தலைவர் என். ரெஜீஸ்குமார், மலைவாழ் இளைஞர் சங்க மாநிலச் செயலாளர் வே.ஏழுமலை உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.  கூட்டத்தில் கீழ்க்கண்டதீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  ஈரோடு மாவட்ட மலைகிராமங்களில் இந்து மலையாளி பிரிவை சார்ந்த சுமார் 25 ஆயிரம் மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர்.

இவர்க ளுக்கு பழங்குடியினர் சான்றிதழ் வழங்குவ தற்குப் பதிலாக இதர பிரிவினர் என்ற வகை யில் தான் சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, வேலூர் உள்ளிட்ட தமிழகத்தின் இதர மாவட்ட மலை கிராமங்களில் வசித்து வரக்கூடிய இந்து மலையாளி பிரிவை சார்ந்த பழங்குடி மக்களுக்கு பழங்குடியினர் சான்றிதழ் வழங்கப்பட்டு வரு கிறது. இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் வசிக்கும் இந்து மலையாளி மக்களுக்கு மட்டும் பழங்குடியினர் சான்றிதழ் வழங்கமறுப்பது எந்த வகையிலும் நியாயமானது அல்ல. இதற் காக, கடந்த காலத்தில் பல கட்டப் போராட்டங்கள் நடைபெற்ற போதும் முந்தைய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.  

எனவே, தமிழகத்தில் புதிதாக பொறுப் பேற்றிருக்கக் கூடிய திமுக அரசு ஈரோடு மாவட்ட மலை கிராமங்களில் வசிக்கக்கூடிய இந்து மலையாளி பிரிவை சார்ந்த மக்களுக்கு பழங்குடியினர் சான்றிதழ் வழங்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.  தமிழகம் முழுவதும் மலை கிராமங்களி லுள்ள அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பணியி டங்களை முழுமையாக நிரப்புவதுடன், அப் பள்ளிகளில் ஆசிரியர்கள் முழுமையாக பணியாற்றுவதையும் உறுதிப்படுத்த வேண்டும். மேலும் அப்பள்ளிகளில் அடிப்படைவசதி களை மேம்படுத்துவதோடு, விடுதி வசதிகளை யும் தமிழக அரசு ஏற்படுத்தித் தர வேண்டும். தமிழ் நாடு மலைவாழ் இளைஞர் சங்கத்தின் மாநில மாநாட்டை2022 பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் ஈரோடு மாவட்டம் கோபி செட்டிப் பாளையத்தில் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

;