tamilnadu

முன்னாள் எம்எல்ஏ டில்லிபாபுவுக்கு ரூ.1 லட்சம் நஷ்டஈடு உறுதி செய்தது உயர் நீதிமன்றம்

முன்னாள் எம்எல்ஏ டில்லிபாபுவுக்கு  ரூ.1 லட்சம் நஷ்டஈடு

 உறுதி செய்தது உயர் நீதிமன்றம்

சென்னை, ஆக. 11- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற  உறுப்பினர் பி.டில்லிபாபு தாக்கப்பட்ட வழக்கில், காவல் துறை டிஎஸ்பி ஒரு லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும்  என்ற மனித உரிமை ஆணையத்தின் உத்தரவை உறுதி செய்து  சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னை-சேலம் எட்டு வழிச்சாலைக்காக தமிழக அரசு நிலம் கையகப்படுத்தியதை கண்டித்து கடந்த 2018 ஜூன் 26 அன்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் செங்கம் அருகே மண்மலை கிராமத்தில் கருப்பு கொடி போராட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பி.டில்லிபாபு, ஓட்டலில் உணவு சாப்பிட்டு விட்டு கை கழுவும் போது செங்கம் டிஎஸ்பி சுந்தரமூர்த்தி தலைமையில், எட்டுக்கும் மேற்பட்ட  போலீசார், அவரை வலுக்கட்டாயமாக இழுத்து கடுமை யாக தாக்கினர். இதுகுறித்து புகார் தெரிவிக்கப்பட்டது. தன் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மனித உரிமை மீறல்  என கூறி மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் டில்லி பாபு வழக்கு தொடர்ந்தார். இதனை ஆய்வு செய்த மனித உரிமை ஆணையம், செங்கம் டிஎஸ்பி சுந்தரமூர்த்தி மற்றும் இரண்டு உதவி காவல் ஆய்வாளர்கள் ரூபாய் ஒரு  லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து டிஎஸ்பி சுந்தரமூர்த்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். நீதி பதிகள் எம்.சுந்தர் மற்றும் ஹேமந்த் சந்தன்கவுடர் அமர்வில்  இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை ஆய்வு செய்த  நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்ததோடு மனித உரிமைகள்  ஆணையத்தின் உத்தரவை உறுதி செய்து தீர்ப்பளித்தனர். இந்த தீர்ப்பை வரவேற்ற பி.டில்லிபாபு, உயர்நீதிமன்றத் தில் வழக்கு நடத்திய வழக்கறிஞர் கார்ல் மார்க்ஸ் மற்றும்  நீதிபதிகளுக்கு தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் நன்றி தெரிவித்துள்ளார்.