tamilnadu

img

விருதுநகர் மாவட்டத்தில் சுகாதார விழிப்புணர்வு பயிற்சி... 

விருதுநகர் 
ஹேண்ட் இன் ஹேண்ட்  இந்தியா நிறுவனம்  குழந்தைகள் மற்றும் பெண்கள் மேம்பாட்டு பணிகளில் அதீத கவனம் செலுத்தி வரும் ஒரு தன்னார்வ அமைப்பாகும். மேலும் இந்த அமைப்பு குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு, சுகாதார விழிப்புணர்வு, மகளிர் குழு மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சிகள், இயற்கை வளங்கள் மேலாண்மை உள்ளிட்ட மக்களுக்கான வாழ்வாதார பணிகளிலும் ஈடுபட்டு வருகிறது.    

இந்நிலையில், விருதுநகர் மாவட்டத்தில் ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா  சார்பில் பெல்ஸ்டார் மகளிர் சுய உதவிக் குழுக்களுடன் இணைந்து சுகாதார விழிப்புணர்வு பயிற்சியுடன் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

இந்த சுகாதார விழிப்புணர்வு கீழ்காணும் 4 தலைப்புகளில் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. 

1)தன்சுத்தம், குடிநீர் மற்றும் கழிப்பறை சுகாதாரம்

2) தாய்சேய் நலம்

3) ஊட்டச்சத்து &  ரத்த சோகை

4) சமூக பொது சுகாதாரம்

முதற்கட்டமாக 500 பேருக்கு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 500 பேரும் தலா 20 பேருக்கு கருத்துக்களை கிராமங்கள் தோறும் தெளிவாக எடுத்துரைப்பார்கள். இந்த  சுகாதார விழிப்புணர்வு பயிற்சியின் தொடக்க விழா நேற்று (டிச.,30) சிவகாசியில் உள்ள பெல்ஸ்டார் அலுவலகத்தில் நடைபெற்றது. ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா முதன்மை மேலாளர் ஜெயபிரகாஷ் தலைமை வகித்தார்.  ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா  தலைமை அலுவலக சுகாதார பிரிவு மேலாளர்கள் திரு லாசர், திரு.உமாபதி ஆகியோர் கலந்துகொண்டு தொடக்க பயிற்சி  அளித்தனர். 

இந்த பயிற்சி மக்களை ஊக்குவிக்கும் வகையில் செயல் விளக்கங்களுடன் விளையாட்டு செயல்பாடுகளுடன்  நடைபெற உள்ளது ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு  தலைப்பின் கீழ்   சுகாதார பயிற்சிகள் முறையாக நடைபெறுகிறதா  என்பது   கண்காணிக்கப்பட்டு அதன்பின் அடுத்தடுத்த தொடர் பயிற்சிகள் நடத்த ஏற்பாடு  செய்யப்பட உள்ளதாவும் நிகழ்ச்சியில் கூறப்பட்டுள்ளது.  

;