tamilnadu

img

குடியரசு நாள்! - சின்னமணல்மேடு த.இராமலிங்கம்

அன்புத் தம்பி தங்கைகளே!
அழகாய்ப் பறக்கும் கொடியைப்பார்
விண்ணைத் தொட்டிடும் கம்பத்தில்
விளங்கும் தேசியக் கொடியைப்பார்.

எதற்கே இன்று கொடியேற்றம்
ஏனோ அதற்கு வணக்கங்கள்
எதற்கே இனிப்புத் தருகின்றார்
எதனால் என்றே அறிவீரோ?

வெள்ளைக்  காரன் நமையாண்டான்.
விடுதலை பெற்றோம் போராடி
நல்ல அரசியல் அமைப்புதனை
நடைமுறை செய்த   நாள்இந்நாள்

அதற்குப் பெயர்தான் குடியரசு
அன்று முதலாய் நம்மைநாம்
எதற்கும் எவர்க்கும் பொதுவாக
ஏற்றே ஆட்சி நடத்துகிறோம்.

எல்லா ருக்கும்  ஓர்நீதி
எவர்க்கும் விடுதலை சமமாகும்.
கல்வி, கடமை, உரிமையெலாம்
காணத் தருவது குடியரசு

இந்நாள் உறுதி ஏற்றிடுவோம்
இந்தி யாவை உயர்த்திடுவோம்
முந்தும் சாதி மதம் வெல்வோம்
மூடம் வென்றே உயர்ந்திடுவோம்.