tamilnadu

ஜூலை 9 வேலைநிறுத்தம்  பட்டதாரி ஆசிரியர்  கழகம் பங்கேற்பு

ஜூலை 9 வேலைநிறுத்தம்  பட்டதாரி ஆசிரியர்  கழகம் பங்கேற்பு

சென்னை, ஜூலை 1 - ஜூலை 9 அன்று நடைபெறும் தேசம் தழுவிய பொது வேலை நிறுத்தத்தில் தமிழ்நாடு உயர்நிலை- மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் பங்கேற்கும் என்று அமைப்பின் பொதுச் செயலாளர் மா. குமரேசன் விடுத் துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும் அந்த அறிக்கையில், “பொது மாறுதல் கலந்தாய்வு  அறிவித்துள்ள நிலையில், லஞ்சம் பெற்று முறைகேடாக பணி  மாறுதல் வழங்குவதை கைவிட வேண்டும். பொது மாறுதலுக்கு முன் பணி நிரவல் செய்வதை கைவிட வேண்டும்.  பொது மாறுதல் கலந்தாய்வில், பணி நிரவலில் சென்றுள்ள  ஆசிரியர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். ஜாக்டோ- ஜியோ சார்பில் நடைபெற்ற ஒரு நாள் தற்செயல் விடுப்பு  போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்களுக்கு சில மாவட்டங்க ளில் ஊதியம் பிடித்தம் செய்யப்பட்டுள்ளதை திரும்ப வழங்க  வேண்டும்” என்று வலியுறுத்தி உள்ளார்.