ஒரே நாளில் ரூ.1,280 உயர்வு ரூ.92 ஆயிரத்தை தாண்டியது தங்கம் விலை!
சென்னை, அக்.11- ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை காலை யில் 680 ரூபாய், மாலையில் 600 ரூபாய் என ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1,280 உயர்ந் தது. இதனால், தங்கம் விலை ஒரு கிராம் ரூ. 11 ஆயிரத்து 500 ஆகவும், ஒரு பவுன் ரூ. 92 ஆயிர மாகவும் உயர்ந்தது. அமெ ரிக்க ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் பதவி யேற்கும் போது தங்கத்தின் விலை பவுன் ரூ. 57 ஆயிர மாக இருந்த நிலையில், கடந்த 10 மாதங்களில் மட் டும் தங்கம் விலை சுமார் 35 ஆயிரம் அதிகரித்துள்ளது.