வணிக நிறுவனங்களில் பணியாற்றும் பெண்களுக்கு ஓய்வு நேரம் தருக! மாதர் சங்க செம்பனார்கோவில் ஒன்றிய மாநாடு வலியுறுத்தல்
மயிலாடுதுறை, ஜூலை 20 - அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் செம்பனார்கோவில் ஒன்றிய 15 ஆவது மாநாடு மயிலாடுதுறை மாவட்டம், ஆக்கூர் அருகேயுள்ள அப்பராசப்புத்தூரில் ஒன்றியத் தலைவர் வி. துர்காதேவி தலைமையில் நடைபெற்றது. ஒன்றியக் குழு உறுப்பினர் என்.விஜயா வரவேற்றார். சங்கத்தின் மூத்த உறுப்பினர் ஜி.சரஸ்வதி கொடியேற்றினார். மாநாட்டை துவக்கி வைத்து மாவட்டச் செயலாளர் ஜி.வெண்ணிலா உரையாற்றினார். வேலை யறிக்கையை ஒன்றியச் செயலாளர் டி.கண்ணகி வாசித்தார். மாநாட்டை வாழ்த்தி விவசாயத் தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் எம். எஸ்.ராஜேந்திரன் உரையாற்றினார். வணிக நிறுவனங்களில் பணியாற்றும் பெண்களுக்கு ஓய்வு நேரம் வழங்க வேண்டும். ரேசன் கடைகளில் தரமான அரிசி வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஒன்றியத்தின் புதிய தலைவராக துர்காதேவி, செயலாளராக கண்ணகி, பொரு ளாளராக விஜயா, துணைத் தலைவராக ஜென்னி, துணைச் செயலாளராக சசிகலா உட்பட 13 பேர் கொண்ட ஒன்றியக் குழு தேர்வு செய்யப்பட்டது. புதிய நிர்வாகிகளை அறிவித்து மாவட்டப் பொருளாளர் ஜி. கலைச்செல்வி நிறைவுரையாற்றினார்.