tamilnadu

திருச்சி விரைவு செய்திகள்

கோட்டைப்பட்டினத்தில் இலவச தோல் நோய் மருத்துவ முகாம்

அறந்தாங்கி, ஜூலை 21-  புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி திசைகள் மாணவ வழிகாட்டு அமைப்பின் சார்பில், தமிழக மீனவர்களை தொடர்ந்து தாக்கும் இலங்கை கடற்படையை கண்டித்தும் ஒன்றிய, மாநில அரசுகள் அதற்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தியும் இலவச தோல் நோய் மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. இந்த முகாமிற்க்கு   கோட்டைப்பட்டினம் ஜமாத் தலைவர் ஷரீஃப் அப்துல்லா தலைமை வகித்தார்.  முகாமில், தமிழக மீனவர்களுக்கான இழப்பீடு உடனே வழங்கப்பட வேண்டும். மீனவர்களை துன்புறுத்துதல், மீனவர்களை சுட்டுக் கொல்லுதல் போன்ற சம்பவங்கள் நிகழ்வுகள் இனி நடக்காத வண்ணம் இந்திய மற்றும் இலங்கை உயர்மட்ட குழு, இரு நாட்டுவெளியுறவு துளை அமைச்சர் உள்துறை அமைச்சர் பாதுகாப்புத்துறை அமைச்சர் தமிழக முதல்வர் உள்ளிட்டோரை உள்ளடக்கி அமைக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்படன.  முகாமில், தோல்நோய் மற்றும் அழகு கலைக் மருத்துவரும் திசைகள் மாணவ வழிகாட்டு அமைப்பின் தலைவரும், மருத்துவருமான தெட்சிணாமூர்த்தி பயனாளிகளுக்கு சிகிச்சை அளித்தார். முகாமில் 220 பேருக்கு சிகிச்சை வழங்கப்பட்டது.

வாவுபலி பொருட்காட்சியில்  ஆடி அமாவாசையை  முன்னிட்டு  ஷெட் போடும் பணி

குழித்துறை, ஜூலை 21- குழித்துறையில் ஆடி அமாவாசையை முன்னிட்டு பலி தர்ப்பணம் நிகழ்ச்சி  24 ம் தேதி நடைபெறுகிறது .இதற்கான ஏற்பாடுகள் இரவு பகலாக தீவிரமாக செய்யப்பட்டு வருகிறது குழித்துறையில் ஆடி அமாவாசையை முன்னிட்டு ஆண்டுதோறும் தாமிரபரணி ஆற்றின் கரையில் வாவுபலி பொருட்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாண்டு நடத்தப்படும் பொருட்காட்சி கடந்த 9 ம் தேதி ஆரம்பமாகி வரும் 28 ம் தேதி முடிய 20 நாள் கள் நடைபெறுகிறது.     பொருட்காட்யில் சி முக்கிய தினமான பலி தர்ப்பணம் ஆடி அமாவாசையை முன்னிட்டு வரும் 24ம் தேதி வியாழக்கிழமை அனுஷ்டிக்கப்படுகிறது இதற்காக குழித்துறை மகாதேவர் கோவில் அருகே தரைப்பகுதி பிரம்மாண்டமாக இன்டர் லாக் போடப்பட்டு பிரமாண்ட ஷெட் அமைக்கும் பணி இரவு பகலாக நடந்து வருகிறது .மேலும் பலி தர்ப்பணத்தில் பங்கெடுக்கும் பொதுமக்களின் பொருட்களை பாதுகாப்பதற்கு தனி ஷெட் அமைக்கும் பணி நடக்கிறது. அன்று காலை 4  மணி முதல்  தும்பு இலையில் பூக்கள், சோறு, தர்பா, பவித்திரம், எள்ளு,சந்தணம் போன்றவைகள் வைத்து இறந்து போன தமது முன்னோர்களை நினைத்து பலி தர்ப்பணம் செய்கின்றனர்.இதனை ஒட்டி தாமிரபரணி ஆற்றுக்கடவு பகுதி சுத்தம் செய்யும் பணியும் நடந்து வருகிறது.

திற்பரப்பு அருவியில்  களை கட்டும் சீசன்  சுற்றுலா பயணிகள் உற்சாகம்

அருமனை, ஜூலை.21- கன்னியாகுமரி மாவட்டம் குமரியின் குற்றாலம் என அழைக்கப்படும் திற்பரப்பு நீர்வீழ்ச்சியில் சுற்றுலாப் பயணிகள் வருகையால் களை கட்டியுள்ளது. குமரி மாவட்டத்தில் தொடர்ந்து சில நாட்களாக மழை பெய்து வருவதால் மலையோர பகுதிகளிலிருந்து நீர் வரத்து அதிகமாகியுள்ளது.இதைத் தொடர்ந்து அணைகளிலும் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இந்நிலையில் திற்பரப்பு நீர்வீழ்ச்சியில் குளு குளு சீசன் ஏற்பட்டு சுற்றுலா பயணிகள் தமிழகம்,கேரளா மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமாக வந்து செல்கின்றனர்.  இதைத் தொடர்ந்து விடுமுறை காலங்களில் அதிகமாக பள்ளிக் கல்லூரி மாணவ மாணவிகளும் சுற்றுலா வந்து செல்கின்றனர்.  இதனால் அப்பகுதியில் வியாபாரிகள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்