tamilnadu

img

55 ஆயிரம் மின்வாரிய காலியிடங்களை நிரப்பிடுக!

கோவை, டிச.11– தடையற்ற மின்விநியோகம் மற்றும் பணியாளர்களின் பணிச்சுமை குறைந் திட மின்வாரியத்தில் உள்ள சுமார் 55 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும் என தமிழ்நாடு பவர் இன்ஜினியர்ஸ் ஆர்கனைசேசன் (டிஎன்பிஇஓ) மாநில மாநாடு வலி யுறுத்தியுள்ளது.  சங்கத்தின் 6 ஆவது மாநில மாநாடு மசக்காளிபாளையம் சாலையில் உள்ள ஹர்சா மஹாலில் சனியன்று நடைபெற்றது. மாநில தலைவர் கே. ஜீவானந்தம் தலைமை தாங்கினார். மாநாட்டு வரவேற்புக்குழு தலைவர் வி.மதுசூதனன் வரவேற்புரையாற்றி னார். ஜெ.கனகமுத்து மாநாட்டு கொடி யேற்றி வைத்தார். மாநில மாநாட்டை துவக்கி வைத்து சங்கத்தின் அகில இந்திய பொதுச்செயலாளர் பிர சாந்தோ நந்தி சௌத்திரி உரையாற்றினார்.  இதனையடுத்து மாநாட்டு வேலை அறிக்கையை மாநில செயலாளர் கே.அருள்செல்வன் முன்வைத்தார். வரவு செலவு அறிக்கையை பொரு ளாளர் ஏ.முருகானந்தம் முன்வைத் தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் கோவை நாடாளுமன்ற உறுப்பி னர் பி.ஆர்.நடராஜன், தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில தலைவர் தி.ஜெய்சங்கர், பொதுச்செய லாளர் எஸ்.இராஜேந்திரன் ஆகியோர் மாநாட்டை வாழ்த்தி உரையாற்றினர். மாநாட்டை நிறைவு செய்து சிஐடியு தமிழ்நாடு மாநில தலைவர் அ.சவுந்தர ராசன் சிறப்புரையாற்றினர்.

புதிய நிர்வாகிகள் தேர்வு'

மாநாட்டில் அமைப்புச் செயலாள ராக கே.ஜீவானந்தம், தலைவராக ஆர். குருவேல், பொதுச்செயலாளராக கே. அருள்குமார், பொருளாளராக கே. ஆதன்இளங்கீரன், துணை பொதுச் செயலாளர்களாக எ.அப்பாதுரை, இரு தயராஜ், ஆடல்அரசு, சோமசுந்தரம் மற்றும் 12 துணைத் தலைவர்கள், 12 துணை செயலாளர்கள் ஆகிய புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். 

மின்சார சட்டத் திருத்தத்தை கைவிடுக!

மின் விநியோக பிரிவில் பணி யாற்றும் பிரிவு அலுவலர்களுக்கு ஏற் படும் பல்வேறு பிரச்சனைகளையும், சிக்கல்களையும், குறைகளையும் நிவர்த்தி செய்யவேண்டும். மின்வாரி யத்தில் செலவுகளை குறைக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் சிங்கிள் போல் மின்மாற்றிகள் அமைக்கப்படு கின்றன. அவை உறுதியில்லாமல் பாது காப்பு இல்லாமல் இருக்கின்றன. இதே போன்று மின் மாற்றி ஜம்பர்களுக்கு தரமான கேபிள்கள் தரப்பட வேண் டும். தற்போது வருகின்ற மின் கம்பங் கள் மிகவும் வழுவழுப்புத் தன்மை யுடன் ஏறுவதற்கு சிரமமாக எளிதில் உடைந்துவிடும் தரத்தில் உள்ளது. தர மான மின்கம்பங்கள் வழங்க வேண்டும். பழைய காலாவதியான இன்சுலேட்டர்களை மாற்றுவதற்கு போர்க்கால அடிப்படையில் போது மான தரமான கால இடைவெளியுடன் தரமான இன்சுலேட்டர்களை தர வேண்டும். ஒன்றிய அரசு மின்சார சட்டத் திருத்தம் 2021 கைவிட வேண்டும். மின் ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை துவக்க வேண்டும். அரசு உத்தரவாதத்துடன் கூடிய முத்தரப்பு ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தை மீண்டும் துவக்க  வேண்டும். அனல் புனல் உற்பத்தி நிலை யங்களில் மின்னியல், இயந்திரவியல் பதவிகளை கண்டறிய குழு அமைக்க வேண்டும். நிறுத்தி வைக்கப்பட்ட பஞ்சப்படி ஒப்படைப்பு சலுகையை மீண்டும் வழங்க வேண்டும். மின்வாரி யத்தில் உள்ள சுமார் 55 ஆயிரம் காலி பணியிடங்களை நேரடி நியமனம், உள்முகத்தேர்வு மற்றும் பதவி உயர்வு மூலம் நிரப்பிட தமிழ்நாடு மின்வாரியம் மற்றும் தமிழக அரசை வலியுறுத்தி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இம்மாநாட்டில் மாநிலம் முழுவதும் இருந்து மின் வாரிய பொறியாளர்கள் திரளாக பங்கேற்றனர். முடிவில்  ஆர்.சோம சுந்தரம் நன்றி கூறினார்.
 

;