tamilnadu

img

மணமேல்குடி அரசு நூலகத்திற்கு புதிய கட்டடம்: விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

மணமேல்குடி அரசு நூலகத்திற்கு  புதிய கட்டடம்: விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

அறந்தாங்கி, செப். 15-  புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடியில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க 12 ஆவது ஒன்றிய மாநாடு நடைபெற்றது.  மாநாட்டிற்கு அல்லாபிச்சை தலைமை வைத்தார். கரூ. இராமநாதன் மாநாட்டை துவக்கி வைத்துப் பேசினார். ஒன்றியச் செயலாளர் செல்லத்துரை வேலை அறிக்கை சமர்ப்பித்தார். 9 பேர் கொண்ட ஒன்றியக் குழு தேர்வு செய்யபட்டது. கரு. இராமநாதன் ஒன்றியத் தலைவராகவும், கராத்தே செல்வராஜ் ஒன்றியச் செயலாளராகவும், செல்லத்துரை பொருளாளராகவும், காதர் பாட்சா, அந்தோணி ஒன்றிய துணைச் செயலாளரகவும், அல்லாபிச்சை, சதீஷ்குமார் ஒன்றிய துணைச் செயலாளர்களாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.  விவசாயிகள் சங்க மாவட்ட துணைத் தலைவர் சி. சுப்பிரமணியன், சிபிஎம் காளிதாசன், சிஜடியு முகமது கனி ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.  புதிய நிர்வாகிகளை அறிமுகப்படுத்தி, மாவட்டத் தலைவர் பொன்னுச்சாமி சிறப்புரை ஆற்றினார்.  அமெரிக்காவின் 50 சதவீதம் வரி விதிப்பால் பாதிப்புக்குள்ளான விவசாயிகள், மீனவர்கள், நெசவாளர்கள் வாழ்வாதாரம் பாதுகாத்திட ஒன்றிய அரசு முன்வர வேண்டும். மணமேல்குடியில் நூலக கட்டிடம் கட்ட தேர்வாகிய இடத்தில் உடனடியாக புதிய கட்டடம் கட்ட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.