செங்கல்பட்டு, செப். 24- பெண்களுக்கான 33 விழுக்காடு இட ஒதுக்கீடு சட்டத்தை வருகின்ற 2024 மக்கள வைத் தேர்தலில் அமல்படுத்த வேண்டும் என்று உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்பு குழுவின் மாநில மாநாடு வலியுறுத்தியுள்ளது. உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்பு குழுவின் சிஐடியு 12 வது மாநில மாநாடு ஞாயிறன்று (செப்.24) செங்கல்பட்டில் தோழர் மைதிலி சிவராமன் நினைவரங்கத்தில் சிஐடியு மாநிலப் பொருளாளர் மாலதி சிட்டிபாபு தலைமையில் நடைபெற்றது. சங்கத்தின் கொடியை காஞ்சிபுரம் மாவட்ட அமைப்பாளர் ஜி.வசந்த ஏற்றிவைத்தார். வரவேற்பு குழு தலைவர் மருத்துவர் ப.பானுகோபன் வரவேற்றார், சிஐடியு மாநில துணைத் தலைவர் எம்.மகாலட்சுமி அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். மாநாட்டை துவக்கி வைத்து சிஐடியு அகில இந்திய தலைவர் கே.ஹேமலதா பேசினார். உழைக்கும் பெண்கள் ஒருங் கிணைப்பு குழுவின் மாநில அமைப்பாளர் எம்.தனலட்சுமி வேலை அறிக்கையை சமர்ப்பித்தார். தீர்மானங்களை முன்மொழிந்து மாநில நிர்வாகிகள் டி.டெய்சி, எம்.ஐடா ஹெலன், ஆர்.எஸ்.செண்பகம், எஸ்.தேவமணி ஆகியோர் பேசினர். மாநாட்டை நிறைவு செய்து சிஐடியு மாநில பொதுச் செயலாளர் ஜி.சுகுமாரன் பேசினார். வரவேற்பு குழு செயலாளர் எம்.கலைச்செல்வி நன்றி கூறினார்
தீர்மானங்கள்
பெண்களுக்கான 33 விழுக்காடு இட ஒதுக்கீடு சட்டத்தை வருகின்ற 2024 மக்ளவைத் தேர்தலில் அமல்படுத்த வேண்டும், தமிழக அரசால் பெண்களுக்கு வழங்கப்படும் உரிமைத் தொகை திட்டத்தில் பல குறைபாடுகள் உள்ளது அவற்றை களைந்து தகுதியுள்ள அனைவருக்கும் சென்று சேர நடவடிக்கை எடுத்திட வேண்டும், உழைக்கும் பெண்கள் நிம்மதியாகவும், பாதுகாப்பாகவும் பணிகளை கவனிக்க அடிப்படை தேவைகள் முழுமையாக பணித்தளங்களில் கிடைக்க வேண்டும், பெண்கள் பணிபுரியும் அனைத்து இடங்களிலும் தனியாக கழிவறை, ஓய்வறை, அமைத்து தர அரசு நடவடிக்கை எடுத்திட வேண்டும், தனியார் நிறுவனங்களில் மகப்பேறு விடுப்பு வழங்குவதுடன், பணி யிடங்களில் குழந்தைகள் காப்பகம் அமைத்திட வேண்டும், விலைவாசி உயர்வை கட்டுப் படுத்துவதுடன் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும், அங்கன்வாடி ஊழியர்கள் ஆஷா ஊழியர்கள் மக்களைத் தேடி மருத்துவம், இப்படி அரசின் நலத் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் திட்ட பணியாளர்களை தொழிலாளர்களாக அங்கீகரிக்க வேண்டும், முறைசாரா தொழிலாளர்களுக்கு சமுக பாது காப்பை உறுதி செய்திட வேண்டும், அனைத்து பணித்தளங்களிலும் பாலியல் புகார் கமிட்டி அமைத்திட அரசு நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.
புதிய நிர்வாகிகள்
உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்பு குழுவின் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்ட னர். மாநில அமைப்பாளராக எம்.தனலட்சுமி, இணை அமைப்பாளர்களாக டி.டெய்சி, ,எம்.ஐடா ஹெலன், ஆர்.எஸ்.செண்பகம், எஸ்.தேவ மணி, எம்.மகாலட்சுமி, எஸ்.கிருஷ்ணவேணி, ஆர்.மாலதி, ஜெ.லூர்துரூபி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.