tamilnadu

img

மலக்குழி மரணங்களை தடுத்து நிறுத்த இயந்திரமயமாக்க வேண்டும்

சென்னை, ஜன.8- மலக்குழி மரணங்களை தடுத்து நிறுத்தி இயந்திரங்களை கொண்டு அவற்றை அகற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று இளைஞர்களுக்கான சமூக விழிப்பு ணர்வு மையம் கேட்டுக்கொண்டுள் ளது. நாகரீக சமூகத்தில் மனித மலத்தை மனிதர்கள் கையால் அள்ளுவதை தடைசெய்தும் “மனிதக் கழிவுகளை அகற்ற பணிய மர்த்தல் தடை மற்றும் மறுவாழ் விற்கான சட்டம் 2013” கொண்டு வரப்பட்டது. இச்சட்டத்தை உள்ளா ட்சி நிர்வாகங்களும், பொறுப்புடைய காவல் மற்றும் வருவாய்த்துறை  அதிகாரிகளும்  நடைமுறை படுத்தாமல் அலட்சியப்படுத்தி வரு வதால்  மலக்குழி மரணங்கள் தொடர் கின்றன. இந்த நிலையில் இந்த மரண ங்களுக்கான காரணங்கள் குறித்து  இளைஞர்களுக்கான சமூக விழிப்பு ணர்வு மையம் விரிவான ஆய்வு ஒன்றை நடத்தியது. அந்த ஆய்வின் அறிக்கை  சென்னையில் சனிக்கிழமை (நவ.7) வெளியிடப்பட்டது.  மையத்தின் இயக்குநர் டாக்டர் வே.அ. ரமேஷ் நாதன்  ஆய்வின் நோக்கம் மற்றும் அறிக்கையின் விவரம் குறித்து விளக்கினார்.  தூய்மை பணி யாளர்  மறுவாழ்வு தேசிய அமைப் பின் இணை அமைப்பாளர் தீப்தி  சுகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஆதித்தமிழர் பேர வையின் தலைவர் இரா. அதியமான், தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்தின் துணைத் தலைவர் புனிதபாண்டியன் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சட்ட மன்ற உறுப்பினர்  எஸ்.எஸ்.பாலாஜி, விட்னஸ் திரைப் பட இயக்குநர்  தீபக், தீண்டாமை  ஒழிப்பு முன்னணியின் பொதுச் செயலாளர்  சாமுவேல்ராஜ் ஆகி யோர் ஆய்வு அறிக்கையை வெளி யிட்டு பேசினர்.

  இந்த ஆய்வினை மேற்கொண்ட பேராசிரியர் எஸ்.கல்யாணி  ஆய்வு குறித்து விளக்கமளித்தார். இரா.முருகப்பன் வரவேற்றார். சாதிய அடிப்படையில், குலத் தொழில் போன்று தலித் மக்கள் ஈடுபடுத்தப்படும் இத்தொழிலை ஒழித்து, முற்றிலும் இயந்திர மயமாக்கவேண்டும், காலங்கால மாக இதில் ஈடுபடுத்தப்பட்டு வரும் அருந்தியர் சமூக மக்களை இதி லிருந்து முற்றிலும் விடுவிக்க வேண்டும் என்பது ஆய்வின் பரிந்துரையாக அளிக்கப்பட் டுள்ளது.   இதர பரிந்துரைகள் வருமாறு: 

மனித மலத்தை மனிதர் அள்ளு வது முற்றிலும் தடை செய்யப்பட் டுள்ள நிலையில், சட்டத்தை முழு மையாக நடைமுறைபடுத்தி, இத் தொழிலை முற்றிலும் ஒழிக்க வேண்டும். முற்றிலும் இயந்திர மயமாக்கி பட்டியலின அருந்ததியர் குடும்பங்கள் இத்தொழில் முறை யிலிருந்து விடுவிக்க வேண்டும்.  மனித கழிவுகளை அகற்ற பணி யமர்த்தல் தடை மற்றும் மறு வாழ்வு சட்டம் 2013 மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டம் 2016 ஆகிய இரண்டும் சரியாக அமல் படுத்த வேண்டும். கழிவு அகற்றும் பணியில் ஈடுபடும்போது மொத்தம் 58 வகையான பாதுகாப்பு உபகர ணங்கள் பயன்படுத்த வேண்டும். இதில்  அரசு முழுமையாக  கவனம் செலுத்தவேண்டும்.   தூய்மைப் பணி புரிவோரின் சமூக, கல்வி மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்கென ஏற்படுத்தப்பட் டுள்ள தமிழ்நாடு தூய்மைப் பணியா ளர்கள் நலவாரியம் முழு வேகத்து டன் செயல்படுவதற்கேற்ற வகை யில் திருத்தியமைக்க வேண்டும்.  ஒப்பந்த முறையில் பணி நியமனம் செய்யப்படுவதை முற்றிலும் நிறுத்த வேண்டும். தற்போது ஒப்பந்தம் மற்றும் தற்காலிக ஊழியர்கள் அனை வரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.   மறுவாழ்வு மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களை தற்போதைய காலத் திற்கேற்று வடிவமைக்க வேண்டும், அதற்கேற்ற வகையில் நிதி ஒதுக்கீடு தற்போதைய காலச் சூழலுக்கு ஏற்ற வகையில் அதிகரிக்கவேண்டும். பாதுகாப்பற்ற முறையில் தூய்மைப் பணியில் ஈடுபடுவதன் காரணமாக  ஊழியர்கள் பல்வேறு வகையிலான ஒவ்வாமைக்கு ஆளாகி, சுவாசக் கோளாறு உள்ளிட்ட பல்வேறு வகையிலான உடல் நல பிரச்சனை களுக்கு ஆளாகின்றனர். முறை யான பாதுகாப்பு, மருத்துவ வசதி, மருத்து சோதனை, மருத்துவக் காப்பீடு, நோய் தடுப்பு சிகிச்சை, ஊசி போன்றவை களை அரசு சிறப்புத் திட்டங்கள் மூலம் செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பரிந்துரைகள் அதில் அளி க்கப்பட்டுள்ளன.