tamilnadu

img

சிஐடியு கரூர் மாவட்ட மாநாட்டு நிதி ரூ.20 ஆயிரம் வழங்கிய மின் ஊழியர் சங்கம்

சிஐடியு கரூர் மாவட்ட மாநாட்டு நிதி  ரூ.20 ஆயிரம் வழங்கிய மின் ஊழியர் சங்கம்

கரூர், ஜூலை 27-  தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் கரூர் மாவட்ட செயற்குழுக் கூட்டம் கரூர் மாவட்டக் குழு அலுவலகத்தில் நடைபெற்றது.  கூட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். சிஐடியு மாநிலச் செயலாளர் எம்.ஐடா ஹெலனிடம், சிஐடியு மாவட்ட மாநாட்டு நிதியாக ரூ.20 ஆயிரத்தை வழங்கினர். சிஐடியு சங்க மாவட்ட தலைவர் ஜி‌.ஜீவானந்தம், மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநிலச் செயலாளர்  கே.தனபால், மாவட்டச் செயலாளர் நெடுமாறன், பொருளாளர் ஈஸ்வரன், ரதி, கென்னடி தண்டபாணி, ஜான்போஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  கடலூர் மாவட்டத்தில் ஆகஸ்ட் மாதம் நடைபெறும் மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில மாநாட்டிற்கு, கரூர் மாவட்டத்தில் இருந்து 5 பேருந்துகளில் 300 பேர் கலந்து கொள்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.