tamilnadu

img

கலிபோர்னியா கடலில் பாதுகாப்பாக இறங்கியது டிராகன் பூமிக்குத் திரும்பினார் சுபான்ஷு சுக்லா!

கலிபோர்னியா கடலில்  பாதுகாப்பாக இறங்கியது டிராகன் பூமிக்குத் திரும்பினார் சுபான்ஷு சுக்லா!

நியூயார்க், ஜூலை 15 - ‘ஆக்ஸியம்-4’ விண்வெளி திட்டத்தின்கீழ் சர்வ​தேச விண்​வெளி நிலை​யத்​தில் 18 நாட்கள் தங்​கி​யிருந்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்ட இந்​திய வீரர் சுபான்ஷூ சுக்லா உள்ளிட்ட 4 விண்வெளி வீரர்கள் டிராகன் விண்கலம் மூலம் பாதுகாப்பாக பூமிக்குத் திரும்பினர். ஜூலை 14 திங்களன்று இந்திய நேரப்படி  மாலை 4.45 மணிக்கு சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பிரிந்த டிராகன் விண்கலம் 22.05 மணிக்கு அமெரிக்​கா​வின் கலிபோர்னியா மாகாணத்தின் அருகே பசிபிக் கடலில் இந்திய நேரப்படி செவ்வாயன்று மாலை 3.01 மணிக்கு பாதுகாப்பாக இறங்கியது. டிராகன் விண்​கலத்​தின் ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறு​ வனம் மற்​றும் நாசா​வின் மீட்​புக் குழுவினர், 4 விண்​வெளி வீரர்களையும் விண்​கலத்​தில் இருந்து பத்​திரமாக வெளியே கொண்டு வந்தனர். முதலில், இந்த திட்டத்தின் கமாண்டா் பெக்கி விட்சன் வெளியே அழைத்து வரப்பட்டார். அவர் எழுந்து நிற்க மீட்புப்படையினர் உதவினர். பிறகு அவரே நடந்துசென்றார். இரண்டாவது நபராக சுபான்ஷூ சுக்லா புன்னகைப் பூத்த முகத்துடன் டிராகன் விண்கலத்திலிருந்து வெளியே வந்தார். அதைத்தொடர்ந்து, மற்ற நான்கு வீரர்களும் பத்திரமாக விண்கலத்திலிருந்து வெளியே அழைத்து வரப்பட்டனர். இந்தியாவின், ‘இஸ்ரோ’ விண்வெளி ஆராய்ச்சி நிலையம் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தில் கவனம் செலுத்தி வருகிறது.  ஆனால், ககன்யான் திட்டத்திற்கு முன்பாகவே நாசா உதவியுடன் சுபான்ஷூ சுக்லாவை  சர்வ தேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பும் முடிவு எடுக்கப் பட்டது. இதன்மூலம் சுபான்ஷூவுக்கு கிடைக்கும் அனுபவம் ககன்யான் திட்டத்திற்கு உதவும் என்பதால் அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்திய வீரர்களுக்கான பயிற்சி மற்றும் நாசா வுக்கான கட்டணம் என இஸ்ரோ சுமார் ரூ. 500 கோடி வரை செலவிட்டுள்ளது.