tamilnadu

img

தமுஎகச பெண்கள் கிளை மாவட்ட மாநாடு

தமுஎகச பெண்கள் கிளை மாவட்ட மாநாடு

திருச்சிராப்பள்ளி, ஆக. 31-  தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க பெண்கள் கிளை திருச்சி மாவட்ட முதல் மாநாடு ஞாயிறன்று, உறையூரில் நடந்தது.  மாநாட்டிற்கு கிளைத் தலைவர் சீத்தா வெங்கடேஷ் தலைமை தாங்கினார். அஞ்சலி தீர்மானத்தை துணைச் செயலாளர் சந்திரா வாசித்தார். செயற்குழு உறுப்பினர் வைத்தீஸ்வரி வரவேற்புரையாற்றினார். செயற்குழு உறுப்பினர்கள் ஜோஸ்லின், தாரகை, பேராசிரியர் பாலின் ஆகியோர் பாடல், கவிதை வாசித்தனர். பாரதிதாசன் பல்கலைக்கழக மகளிர்துறை முனைவர் சுபா துவக்க உரையாற்றினார். செயல் அறிக்கையை செயலாளர் ஹேமலதா வாசித்தார்.  திருச்சிராப்பள்ளி கவிஞர்கள், கவிதைகள் புத்தக முன் அட்டையை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநில துணைத் தலைவர் நீலா வெளியிட, அதனை கிரீன் பார்க் ப்ளே ஸ்கூல் பள்ளி முதல்வர் ஹேமா பெற்றுக்கொண்டார். மாநாட்டில், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாவட்டச் செயலாளர் ரங்கராஜன், மாவட்டத் தலைவர் வெங்கடேஷ், மாவட்டப் பொருளாளர் அரிபாஸ்கர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.  மாநாட்டில், கிளையின் புதிய தலைவராக பேராசிரியர் பாலின், செயலாளராக ஆசிரியர் சிசிலி, பொருளாளராக கவிஞர் நிர்மலா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மாநில துணைத் தலைவர் நீலா நிறைவுரையாற்றினார். செயற்குழு உறுப்பினர் சுமித்ரா நன்றி கூறினார்.