tamilnadu

img

ஜவகர் சிறுவர் மன்ற ஓவிய ஆசிரியருக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு

ஜவகர் சிறுவர் மன்ற  ஓவிய ஆசிரியருக்கு  மாவட்ட ஆட்சியர் பாராட்டு

திருவாரூர், ஜூலை 27-  தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டு துறை சார்பில், சென்னையில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதனால், திருவாரூர் மாவட்டத்தைச் சார்ந்த சிறுவர் மன்ற ஓவிய ஆசிரியர் பா. யோகானந்தனத்திற்கு, 2024-2025 ஆண்டிற்கான சிறந்த கலை ஆசிரியர் விருது மற்றும் ரூ.10 ஆயிரத்திற்கான காசோலை வழங்கப்பட்டது. இதனை அடுத்து, திருவாரூர் மாவட்ட ஜவகர் சிறுவர் மன்ற ஓவிய ஆசிரியர் ப. யோகானந்தம், மாவட்ட ஆட்சியர் வ. மோகனச்சந்திரனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். விருது பெற்றமைக்கு பாராட்டி, மேலும் விருதுகளை பெற்றிட மாவட்ட ஆட்சியர் வாழ்த்து தெரிவித்தார்.

பருத்தி மறைமுக ஏலம் 

பாபநாசம், ஜூலை 27-  தஞ்சாவூர் விற்பனைக் குழுவின் கீழ் இயங்கி வரும் பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம் நடந்தது.  மின்னணு தேசிய வேளாண் சந்தை சார்பில் நடந்த, பருத்தி மறைமுக ஏலத்தில் 1,953 விவசாயிகள் 3,000 குவிண்டால் பருத்தி எடுத்து வந்தனர். கும்பகோணம், செம்பனார்கோவில், ஆக்கூர் முக்கூட்டு, பண்ருட்டி, விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 11 வணிகர்கள் ஏலத்தில் கலந்து கொண்டு, பருத்திக்கு அதிகபட்சம் ரூ.7,729, குறைந்தபட்சம் ரூ.7,273, சராசரி ரூ.7,453 என விலை நிர்ணயித்தனர். இதன் மதிப்பு ரூ.1,45,55,709.