tamilnadu

img

அம்ரூத் திட்டத்தால் நகராட்சி பணிகளில் தேக்கம் ஆணையாளரிடம், துணைத் தலைவர் வாக்குவாதம்

அம்ரூத் திட்டத்தால் நகராட்சி பணிகளில் தேக்கம் ஆணையாளரிடம், துணைத் தலைவர் வாக்குவாதம்

நாமக்கல், ஜூன் 30 – அம்ரூத் திட்டத்தால் நகராட்சிப் பணிகள் பெரு மளவு தேக்கம் ஏற்பட்டிருப்ப தாகவும், இதனால் அரசு மீது  பொதுமக்களுக்கு கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளது என  ஆணையாளரிடம், மன்றத் தின் துணைத் தலைவர்  வாக்குவாதத்தில் ஈடுபட்ட தால் பரபரப்பு ஏற்பட்டது. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் நக ராட்சி சாதாரண கூட்டம் திங்களன்று நடை பெற்றது. கூட்டத்திற்கு நகர மன்றத் தலை வர் செல்வராஜ், துணைத்  தலைவர் பால முருகன் தலைமை தாங்கினர். நகராட்சி ஆணையர் தயாளன் முன்னிலை வகித் தார். இந்த கூட்டத்தில் அதிமுக, திமுக, மதி முக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த வார்டு  உறுப்பினர்கள் பங்கேற்ற நிலையில், நக ராட்சி பகுதியில் கடந்த இரண்டு ஆண்டு களுக்கு மேலாக மத்திய அரசின் அம்ரூத்  திட்டத்தில் அமைக்கப்பட்ட குடிநீர் குழாய் கள் முறையாக அமைக்கப்படாததாலும் போதிய, கவனமின்மையாலும் குடிநீர் பற் றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் வார்டு  பொதுமக்களுக்கு பதில் சொல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாது. அடுத்த முறை பொது மக்களை சந்தித்து வாக்குகளை கேட்க  முடியாத நிலை உருவாகியுள்ளதாக இரண்டாவது வார்டு திமுக கவுன்சிலர் நவீனா  பாலமுருகன் குற்றம் சாட்டினார். இதனை ஆமோதித்துப் பேசிய திமுக  நகர மன்ற துணைத் தலைவர் பாலமுருகன் நகராட்சி ஆணையாளர் மக்கள் பிரச்சனை கள் குறித்து தொடர்பு கொண்டாலும், போனை எடுப்பதில்லை அலட்சியப் போக்கு டன் நடந்து கொள்கிறார் மேலும் நகராட்சி ஆணையாளரின் செயல்பாடு காரணமாக தமிழக அரசிற்கு கெட்ட பெயர் ஏற்பட்டுள் ளது என பகிரங்கமாக குற்றம் சாட்டி வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.  துணைத் தலைவரின் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் நகராட்சி ஆணை யாளர் தயாளன் மலுப்பலாக பதில் கூறவே,  மேலும் கோபமடைந்த நகராட்சி துணைத் தலைவர் பாலமுருகன் நகராட்சி பொறியா ளர் உள்ளிட்டோரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக நகராட்சி கூட்ட  அரங்கில் பரபரப்பான சூழல் காணப்பட் டது.