ஜார்க்கண்ட் : காங்கிரஸ் அமைச்சரை குறிவைத்து அமலாக்கத்துறை சோதனை
ஜார்க்கண்டில் ஜேஎம்எம் - காங்கி ரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதலமைச்சராக ஜேஎம்எம் தலைவர் ஹேமந்த் சோரன் உள்ளார். இந்த ஜேஎம்எம் - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க பாஜக அமலாக்கத் துறையை அடிக்கடி பயன்படுத்துவது வாடிக்கையாகி விட்டது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை அன்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரான யோகேந்திர சாவ், அவரது மகனும் முன்னாள் எம்எல்ஏ வுமான அம்பா பிரசாத் ஆகியோரை குறி வைத்து ராஞ்சி, ஹசாரிபாக் மாவட்டங் களின் 8 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியுள்ளது. சட்டவிரோத சுரங்கம் மற்றும் நிலக்கரி, மணல் போக்குவரத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் பணமோசடி வழக்கு தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக இந்த சோதனைகள் நடைபெற்றன என அமலாக்கத்துறை தெரிவித்தது.