நாகர்கோவில், ஜூலை 6- குமரி-கேரளாவை இணைக்கும் தூத்தூர்-பொழியூர் கடற்கரை சாலை துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள், பள்ளி மாணவ-மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜூன், ஜூலை, ஆகஸ்டு ஆகிய மாதங்களில் ஆண்டுதோறும் குமரி மேற்கு கடற்கரை மற்றும் கேரள கடற்கரை பகுதிகளில் கடல் சீற்றம் ஏற்படுவது வழக்கம். அவ்வாறு சீற்றத்தின்போது கரையை ஒட்டியுள்ள வீடுகளின் பகுதியில் மணல் அரிப்பு ஏற்படும். அப்போது கடற்கரையை ஒட்டியுள்ள வீடுகளில் கடல் நீர் புகுந்து விடுவது வழக்கமாக உள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டும் கடந்த 3 நாட்களுக்கு முன்பிருந்து கடல் சீற்றம் அதிகமாக இருந்து வருகிறது. இதை தடுக்க தமிழக மற்றும் கேரள அரசுகள் கடற்கரை கிராமங்களில் பெரிய அளவிலான பாறை கற்களை கொண்டு அலை தடுப்புச்சுவர் அமைத்து பாதுகாத்து வருகின்றன. வியாழக்கிழமை காலையிலும் கடல் சீற்றம் அதிகமாக இருந்தது. ராட்சத அலைகள் கடற்கரையை யொட்டி உள்ள தூண்டில் வளைவு களில் வேகமாக மோதியது. தூண்டில் வளைவு இல்லாத பகுதிகளில் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது. மாவட்ட எல்லைப்பகுதியில் உள்ள மீனவர்கள் அதிக அளவு பயன் படுத்தும் கன்னியாகுமரி-கேரளாவை இணைக்கும் தூத்தூர்- பொழியூர் சாலை ராட்சத அலைகள் இழுத்துச் சென்றதால் வாகனங்கள் செல்ல முடி யாத நிலை ஏற்பட்டுள்ளது. சாலை யோரத்தில் அடுக்கப்பட்டு இருந்த கற்களையும் அலைகள் கடலுக்குள் இழுத்துச் சென்றன. மேலும் பள்ளி, கல்லூரி மாணவர்களும் இந்த சாலையை பயன்படுத்தி வந்தனர். இந்த சாலை யில் பள்ளி வாகனங்கள் செல்ல முடி யாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பல கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சாலையை சீரமைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்க ளும், பொதுமக்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.