சுதேசி இயக்கத்தால் உருவான `சியூபி’ நாடு முழுவதும் 887 கிளை: காமகோடி
மன்னார்குடி, செப். 6- சிட்டி யூனியன் வங்கியின் 120 ஆவது ஆண்டு நிறைவு விழாவில் அதன் நிர்வாக இயக்குநர் காமகோடி வரவேற்று பேசினார். அப்போது அவர், “கும்பகோணத்தைச் சேர்ந்த 20 பேரின் சிந்தனையால், 1940-இல் உருவானதுதான் `சிபியூ’ வங்கி. சுதேசி இயக்கத்தால் உத்வேகம் பெற்ற அவர்கள், ஒரு வணிக வங்கியை தொடங்க வேண்டும் என்று விரும்பினர். அதுதான் கும்பகோணம் பேங்க் விமிடெட் என்ற வங்கி ஆரம்பிக்க காரணமாக அமைந்தது. படிப்படியாக இந்த வங்கி, பல்வேறு இடங்களில் கிளைகளைத் தொடங்கியதோடு, தமிழகத்துக்கு வெளியே பெங்களூரில் 1980-இல் முதல் கிளையை ஆரம்பித்தது. பிறகு, வெவ்வேறு மாநிலங்களிலும் கிளைகள் விரிவாக்கம் செய்யப்பட்டன. 1987-இல் சிட்டி யூனியன் வங்கி என்று பெயர் மாற்றம் செய்யப்படட்து. இப்போது, 20 மாநிலங்களிலும், 2 யூனி யன் பிரதேசங்களிலும் 887 கிளைகளைக் கொண்டுள்ளது. மொத்த வணிகம் ரூ.1.21 லட்சம் கோடியை எட்டியுள்ளது. 40 லட்சம் வாடிக்கையாளர்கள் உள்ளனர். பாரம்பரிய மும், நவீன தொழில் நுட்பமும் ஒருங்கி ணைந்திருப்பதே வங்கியின் தனிச்சிறப்பா கும். அதேபோல, மதிப்பீடுகளும், நவீன டிஜிட்டல் சேவைகளும் இங்கே சேர்ந்துள்ளன’’ என்று பேசினார்.