பருவமழையை எதிர்கொள்ள தயார் நிலையில் கடலூர் காவல்துறை
கடலூர், அக்.19- வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள 22 வகை யான பேரிடர் மீட்பு பொருட்களுடன் 170 பயிற்சி பெற்ற வீரர்கள் காவல்துறையில் தயாராக உள்ளனர் என கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தெரிவித் துள்ளார். வடகிழக்கு பருவமழை துவங்கியதை தொடர்ந்து, கடலூர் மாவட்டத்தில் காவல்துறை சார்பில் வைக்கப் பட்டுள்ள பேரிடர் தடுப்பு உபகரணங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தனது அலுவலகத்தில் ஆய்வு செய்தார். ஆய்வுக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், 22 வகையான பேரிடர் தடுப்பு உபகரணங்களுடன் 10 குழுக்கள் தயார் நிலையில் இருப்பதாகவும், 170 பேர் பேரிடர் தடுப்பு பயிற்சி பெற்றவர்கள் என்றும் தெரிவித்தார். மேலும் 94 பேர் ஆயுதப்படையில் இருப்பதாகவும் கூறினார்.