தெருக்களில் மனிதர்கள் வீசி யெறியும் சிகரெட் துண்டு களை காக்கைகளைக் கொண்டு பொறுக்கும் திட்டத்தை ஸ்வீடனில் ஒரு நகரசபை தொடங்கியுள்ளது. புத்திசாலிக் காக்கைகள் இந்த நகரத்தில் தெருக் குப்பைகளுக்கு எதிரான போராட்டத்தில் புது ஆயுதமாக மாறியுள்ளன. இதற்காக இந்நகரின் தெருக்களிலும் சதுக்கங்களி லும் மனிதர்கள் வீசியெறியும் சிகரெட் துண்டுகளைப் பொறுக்க காக்கைகள் நியமிக்கப்பட்டுள்ளன.
காக்கை ஆராய்ச்சி
செயிண்ட் ஆண்ட்ரூஸ் பல்கலைக் கழக உயிரியல் மற்றும் விலங்குகளின் நடத்தை பற்றி ஆராயும் பிரிவின் ஆய்வா ளர்கள் நியூ கலிடோர்னியா வகை காக்கைகள் புத்திசாலிகள் மட்டும் இல்லை. தங்களிடம் ஒப்படைக்கப்படும் கருவிகளைக் கூட பாதுகாப்புடன் பராமரிக் கின்றன என்று கண்டுபிடித்த்துள்ளனர்.
ஒவ்வொரு சிகரெட் துண்டிற்கும் ஒரு பரிசு
வனங்களில் வாழும் இந்த காக்கை கள் ஒவ்வொரு சிகரெட் துண்டைப் பொறுக்கி இதற்கென்று அமைக்கப்பட் டுள்ள குறிப்பிட்ட இயந்திரத்தில் போட்ட பிறகு அன்பளிப்பாக அவற்றிற்கு சிறிதளவு உணவு கொடுக்கப்படுகிறது. நியூ கலிடோர்னியா குடும்பத்தைச் சேர்ந்த இந்த காக்கைகள் ஏழு வயது மனிதர்களின் அறிவுடன் தெருவில் கிடக்கும் சிகரெட் துண்டுகளைப் பொறுக்குகின்றன என்று புதிய ஆய்வுகள் கூறுகின்றன.
செலவு குறையும்
ஸ்வீடன் ஸ்டாக்ஹோம் நகரிற்கு அருகில் இருக்கும் ஸ்டாடடெல்ஜ் (Sader talje) என்ற ஊரில் நகரசபை நிர்வாகம் புதிய தொழில் முனைவோர் ஒருவரின் உதவியுன் இத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. தன்னார்வ அடிப்படையில் காக்கைகள் இந்த வேலையை செய்கின்றன.
காக்கைகளுக்கு பயிற்சி
கோர்விட் தூய்மை (Corvid cleaning) என்ற நிறுவனத்தின் உரிமையாளர் கிறிஸ்ட்யன் குன்ஹர்-ஹேன்சன்(Christian Guundher-Hanssen) காக்கை களை இதற்காக பழக்கியுள்ளார். ஸ்வீடனைச் சுத்தமாக வைத்திருக்கும் திட்டம் (The Keep Sweeden Tidy Foundation) என்ற அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் ஒரு பில்லியன் சிகரெட் துண்டு கள் ஸ்வீடன் நாட்டின் தெருக்களில் தூக்கியெறியப்படுகின்றன என்று கூறுகிறது.
குப்பைகளில் 62%
இது அங்கு உருவாகும் குப்பை களில் 62% என்று அந்த அமைப்பு கூருகிறது. இந்த சிறு நகரம் ஒவ்வொரு ஆண்டும் தெருக்களில் இருந்து இக்குப்பைகளை அகற்ற 20 மில்லியன் ஸ்வீடன் க்ரோனா/1.6 மில்லியன் பவுண்டுகளை செலவிடுகிறது.
செலவைக் குறைக்க உதவும் காக்கைகள்
இந்நகரத்தில் மட்டும் ஆண்டிற்கு இந்த சிகரெட் துண்டுகளைப் பொறுக்க ஆகும் செலவில் 75% இந்த காக்கைகள் மூலம் குறையும் என்று கிறிஸ்டியன் கூறுகிறார். பரிசோதனை முறையில் செயல்படும் இத்திட்டம் விரைவில் நகரம் முழுவதற்கும் விரிவுபடுத்தப்படும் என்று நம்பப்படுகிறது. கோர்விட் குடும்பத்தைச் சேர்ந்த இந்த காக்கைகள் தங்களுக்குக் கொடுக்கப்படும் பணியை முடிப்பதில் திறம்பட செயல்படுகின்றன.
சுலபமாகக் கற்றுக்கொள்ளும் காக்கைகள்
காக்கைகளுக்குக் கற்றுக்கொடுப் பது சுலபம். இவை பரஸ்பரம் ஒன்றைப் பார்த்து மற்றொன்று கற்றுக்கொள் கின்றன. தங்களுக்குள் கருத்துப் பரி மாற்றம் செய்துகொள்கின்றன. புத்திக் கூர்மையுடன் செயல்படுவதால் இவை தவறுதலாக ஆபத்தான குப்பைகளைப் பொறுக்குவதில்லை என்று ஆய்வா ளர்கள் கூறுகின்றனர்.
மனிதர்கள் பொறுக்கினால்
வழக்கமாக மனிதர்களைப் பயன் படுத்தி ஒவ்வொரு சிகரெட் துண்டை நீக்க 2 க்ரோனாக்கள் (க்ரோனா-ஸ்வீடன் நாட்டின் நாணயம்) செலவிடப்படுகிறது. ஆனால் இதே வேலையை காக்கைகள் 0.20 க்ரோனா செலவில் செய்து முடித்துவிடுகின்றன.
திருந்தாத மனிதர்களும்; சொன்னதைச் செய்யும் காக்கைகளும்
“சிகரெட் துண்டுகளைப் பொறுக்க காக்கைகளுக்கு நாம் கற்றுக்கொடுக்க லாம். ஆனால் அவற்றை தெருவில் அலட்சியமாக வீசியெறியாதீர்கள் என்று மனிதர்களுக்குக் கற்றுக் கொடுப்பது கடினம்” என்று இந்நகரத்தின் கழிவு மேலாண்மை நிபுணர் டோமாஸ் தெர்ன்ஸ்டார்ம் (Tomas Thernstrom) கூறுகிறார். சிந்தித்துப் பார்த்தால் இதில் இருக்கும் சுவாரசிய மான உண்மை புரியும் என்றும் அவர் கூறுகிறார். நல்லது கெட்டதைப் பகுத்தறியும் அறிவுள்ள மனிதன் திருந்தாதவரை சூழல் பாதிப்புகள் தொடர்ந்துகொண்டு தான் இருக்கும். இனியேனும் அவன் காக்கைகளைப்பார்த்து கற்றுக்கொள் வானா!