tamilnadu

img

சிபிஎம் முதுபெரும் தலைவர் அச்சுதானந்தன் மறைவு மாவட்டங்களில் மாலை அணிவித்து செவ்வணக்கம்

சிபிஎம் முதுபெரும் தலைவர் அச்சுதானந்தன் மறைவு  மாவட்டங்களில் மாலை அணிவித்து செவ்வணக்கம்

அரியலூர், ஜூலை 22-  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரும், சுதந்திரப் போராட்ட வீரரும், கேரள மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான வி.எஸ். அச்சுதானந்தன் திங்களன்று காலமானார். அவரது உருவ படத்தை வைத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரியலூர் மாவட்டக் குழு சார்பில் புகழஞ்சலி கூட்டம் நடைபெற்றது.  கட்சியின் மூத்த தலைவர் ஆர். சிற்றம்பலம் தலைமை வகித்தார். இதில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் எம். இளங்கோவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.துரைசாமி, மாவட்டக் குழு உறுப்பினர் எஸ். மலர்கொடி,    ஒன்றியக் குழு உறுப்பினர்கள் வாலிபர் சங்க மாவட்ட செயற்குழு உறுப்பினர் அ.குணா, துர்காதேவி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.  ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், தா.பழூர், செந்துறை, திருமானூர் உள்ளிட்ட பகுதிகளிலும் அச்சுதானந்தன் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து புகழஞ்சலி செலுத்தப்பட்டது.  பெரம்பலூர்  கட்சியின் பெரம்பலூர் மாவட்டக்குழு சார்பில், செவ்வாய்க்கிழமை பெரம்பலூர் துறைமங்கலத்திலுள்ள அலுவலகத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி, மாவட்டச் செயலாளர் பி. ரமேஷ் தலைமையில் நடைபெற்றது.  இரங்கல் கூட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் என். செல்லதுரை, எஸ். அகஸ்டின், ஏ.கே. ராஜேந்திரன், ரெங்கநாதன், கலையரசி, டாக்டர்.சி. கருணாகரன், மாவட்ட குழு உறுப்பினர்கள் இரா.எட்வின், கருணாநிதி, கோகுலகிருஷ்ணன், குன்னம் வட்டச் செயலாளர் செயலாளர் செல்லமுத்து, வேப்பந்தட்டை ஒன்றியச் செயலாளர் சக்திவேல், வி.சி.க, மாவட்ட துணை அமைப்பாளர் மணிமாறன், விவசாயக் குழு உறுப்பினர் அய்யாக்கண்ணு, பகுஜன் சமாஜ் கட்சி மாநிலச் செயலாளர் வழக்கறிஞர் காமராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  திருவாரூர்  சிபிஎம் திருவாரூர் மாவட்ட குழு சார்பாக மாலை அணிவித்து செவ்வணக்கம் செலுத்தப்பட்டது. திருவாரூர் சிபிஎம் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சிக்கு  மாவட்டச் செயலாளர் டி.முருகையன் தலைமை வகித்தார். மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி. நாகராஜன் அஞ்சலி செலுத்தி இரங்கல் உரையாற்றினார். நிகழ்வில் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் வீ. அமிர்தலிங்கம், கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே. தமிழ்மணி, பா.கோமதி, கே.பி. ஜோதிபாசு, சிஐடியு மாவட்டச் செயலாளர் இரா. மாலதி, தலைவர் எம்.கே.என். அனிபா, பொருளாளர் கே. கஜேந்திரன் உள்ளிட்ட பலர் அச்சுதானந்தன் படத்திற்கு மலர் தூவி செவ்வணக்கம் செலுத்தினர்.  இதேபோல், திருவாரூர் மாவட்டம் முழுவதும் கட்சியின் ஒன்றியக் குழு, நகரக்குழு சார்பாக செவ்வணக்கம், இரங்கல் கூட்டம் நடைபெற்றது.  நாகப்பட்டினம் தோழர் வி.எஸ்.அச்சுதானந்தன் மறைவுக்கு புகழ் அஞ்சலி நிகழ்ச்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாகப்பட்டினம் தெற்கு ஒன்றியக்குழு சார்பில், பாப்பாகோவிலில், கீழ்வேளூர் தொதுதி சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகைமாலி தலைமையில் நடைபெற்றது. இதில் ஒன்றியச் செயலாளர் வடிவேல், மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் முகேஷ் கண்ணா மற்றும் பலர் பங்கேற்றனர்.  நாகப்பட்டினம் வடக்கு ஒன்றியக்குழு சார்பாக, சிக்கல் கிராமத்தில் உள்ள கட்சி அலுவலகம் முன்பு செவ்வணக்கம் செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் வி.வி. ராஜா தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம். முருகையன். ப. சுபாஷ் சந்திரபோஸ்,  டி. லதா ஆகியோர் பங்கேற்றனர்.  புதுக்கோட்டை புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே நடைபெற்ற கூட்டத்திற்கு சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.சங்கர் தலைமை வகித்தார். கட்சியின் மாநிலக்குழு உறுப்பினரும் கந்தர்வகோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான எம்.சின்னதுரை, திமுக வடக்கு மாவட்டச் செயலாளர் கே.கே. செல்லப்பாண்டியன், சிபிஐ மாவட்டச் செயலாளர் த. செங்கோடன், மதிமுகவில் பொதுக்குழு உறுப்பினர் கவிச்செல்வம், மனிதநேய மக்கள் கட்சி அப்துல் கனி, ஆம் ஆத்மி மாவட்டச் செயலாளர் அப்துல் பஜார், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.கவிவர்மன், ஏ. ஸ்ரீதர், கே.சண்முகம், ஜி.நாகராஜன், த.அன்பழகன், துரை.நாராயணன், எஸ்.ஜனார்த்தனன், கி.ஜெயபாலன், டி.சலோமி உள்ளிட்டோர் புகழஞ்சலி உரை நிகழ்த்தினர். திருச்சிராப்பள்ளி  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி புறநகர் மாவட்ட குழு சார்பில் செவ்வாய் அன்று வெண்மணி இல்லத்தில், புகழஞ்சலி கூட்டம் நடைபெற்றது.  கூட்டத்திற்கு புறநகர் மாவட்டச் செயலாளர் சிவராஜ் தலைமை வகித்தார். மாநிலக் குழு உறுப்பினர் ஜெயசீலன், மூத்த தோழர் கே.வி.எஸ். இந்துராஜ் ஆகியோர் புகழஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சந்திரன், சம்பத், பன்னீர்செல்வம், மல்லிகா, ரஜினிகாந்த், முத்துக்குமார், சிதம்பரம் உட்பட பலர் தோழர் வி.எஸ். அச்சுதானந்தனின் உருவப்படத்திற்கு மலர் தூவி செவ்வணக்கம் செலுத்தினர்.  கட்சியின் திருச்சி மாநகர் மாவட்டக்குழு சார்பில், செவ்வாய் அன்று வெண்மணி இல்லத்தில் புகழஞ்சலி கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாநகர் மாவட்டச் செயலாளர் கோவி. வெற்றிச்செல்வம் தலைமை வகித்தார். மாநில கட்டுப்பாட்டுக் குழு தலைவர் எஸ். ஸ்ரீதர், மூத்த தோழர் கே.வி.எஸ். இந்துராஜ் ஆகியோர் புகழஞ்சலி செலுத்தினர். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ராஜா, லெனின், கார்த்திக், மணிமாறன் உட்பட பலர் அச்சுதானந்தனின் உருவப்படத்திற்கு மலர் தூவி செவ்வணக்கம் செலுத்தினர்.  தஞ்சாவூர்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மாவட்டக்குழு அலுவலகத்தில், வீரவணக்கம், செவ்வஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி, சிபிஎம் மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இதில், மூத்த தலைவர்கள் என். சீனிவாசன், கோ.நீலமேகம், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ஆர். மனோகரன், சி. ஜெயபால், பி. செந்தில்குமார், என்.சரவணன், எஸ்.செல்வராஜ், கே.அபிமன்னன், மாநகரச் செயலாளர் எம்.வடிவேலன், மாவட்டக்குழு உறுப்பினர் எஸ். கோவிந்தராஜ் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.  கரூர் கட்சியின் கரூர் மாவட்டக் குழு சார்பில், கரூர் பேருந்து நிலையம் காமராஜர் சிலை அருகே, அஞ்சலி செலுத்தும் கூட்டம் நடைபெற்றது.  கூட்டத்திற்கு கட்சியின் மாவட்டச் செயலாளர் மா.ஜோதிபாசு தலைமை வகித்தார். கட்சியின் கரூர் மாநகரச் செயலாளர் எம்.தண்டபாணி, திமுக மாநகரச் செயலாளர்கள் ஆர். ஜோதிபாசு, குமார், பாண்டியன், சுப்பிரமணியன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் கா.கந்தசாமி, காங்கிரஸ் கட்சியின் சார்பில் பேங்க் சுப்பிரமணியன், ஸ்டீபன்பாபு, சிபிஐ மாவட்டச் செயலாளர் கலாராணி, மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் ரத்தினம், வாலிபர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சிவக்குமார், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் இளங்கோ, சக்திவேல், புகழேந்தி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர்கள், ஒன்றியச் செயலாளர்கள், உறுப்பினர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.