போக்குவரத்து, மின்சாரத் துறை அமைச்சரிடம் சிபிஎம் மனு
அரியலூர், ஜூலை 30 - அரியலூர் மாவட்டம் முழுவதும் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், நீர்நிலை புறம்போக்குகள் என கூறி ஏழை- எளிய மக்களின் வீடுகளை புல்டோசர் மூலம் இடித்து அகற்றும் போக்கை கைவிட கோரி தமிழ்நாடு போக்கு வரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவ சங்கரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் கோரிக்கை மனு அளித்தார். மனுவைப் பெற்றுக் கொண்ட அமைச்சர் எஸ்.எஸ்.சிவ சங்கர் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இதில் கட்சியின் மாவட்ட செயலாளர் எம்.இளங்கோவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.துரைசாமி, ஏ.கந்தசாமி, எம். வெங்கடாசலம் மற்றும் சந்தானம், மூத்த நிர்வாகி சிற்றம் பலம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.