tamilnadu

img

முதல்வருடன் சிபிஎம் தலைவர்கள் சந்திப்பு

முதல்வருடன் சிபிஎம் தலைவர்கள் சந்திப்பு

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் ஆகியோர், சென்னை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்தனர். உச்ச நீதிமன்றத்தில் சட்டப்போராட்டம் நடத்தி, மசோதாக்களை ஆளுநர் நிறுத்தி வைத்தது சட்டவிரோதம் என்று, கூட்டாட்சிக் கோட்பாட்டிற்கு  சாதகமான தீர்ப்பைப் பெற்றிருக்கும் முதல்வருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  அகில இந்திய மாநாட்டையொட்டி, மதுரையில் நடத்தப்பட்ட மாநில உரிமைப் பாதுகாப்புக் கருத்தரங்கில் கலந்து கொண்டதற்கும் முதல்வருக்கு, சிபிஎம் தலைவர்கள் நன்றி தெரிவித்து மாநாட்டு சிறப்பு மலரை வழங்கினர்.