tamilnadu

காவல்துறையினர் ஜாமீன் கோரியதற்கு சிபிஎம் ஆட்சேபணை மனு தாக்கல்

சாத்தான்குளம் காவல்நிலைய கொலை வழக்கு

தூத்துக்குடி, ஜூலை 10- சாத்தான்குளம் காவல்நிலைய கொலை வழக்கில் காவல்துறையினர் ஜாமீன் கோரியதற்கு மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆட்சே பணை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சாத்தான்குளம் காவல் துறை யினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட வணிகர்களான ஜெய ராஜ், இவரது மகன் பென்னிக்ஸ், சித்ர வதைக்குள்ளாகி மரணமடைந்த கொலை வழக்கில் காவல் துறை யினர் மீது கொலை வழக்கு பதிந்து, கைது செய்யப்பட்டு மதுரை சிறை யில் அடைக்கப்பட்டுள்ளனர். இவ் வழக்கில் கைதாகி உள்ள காவல் ஆய் வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர் பால கிருஷ்ணன், இருவரும் தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்துள்ளனர். இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாவட்டச் செயலாளர் கே.எஸ். அர்ச்சுனன் ஆட்சேபணை தெரிவித்து தனது தரப்பு வாதங்களை கேட்க வேண் டுமென மனுத்தாக்கல் செய்துள்ளார்.  சாத்தான்குளம் வணிகர்கள் ஜெய ராஜ், பென்னிக்ஸ் இருவரையும் விசார ணைக்காக அழைத்துச் சென்று காவல் துறையினர் அடித்து, துன்புறுத்தி, சித்ர வதை செய்து கொலை செய்தனர். இவ் வழக்கை மதுரை உயர்நீதிமன்ற கிளை தாமாக முன்வந்து எடுத்து விசாரணை நடத்தி சிபிசிஐடி விசாரணைக்கும், பல்வேறு உத்தரவுகளையும் பிறப் பித்துள்ளது. சிபிஐ விசாரணையும் துவங்கி உள்ளது. 

ஜெயராஜ் குடும்பத்தினரை பிரதி நிதித்துவப்படுத்தும் வகையில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஜூன் மாதம் 29 ஆம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் கே.எஸ்.அர்ச்சுனன் மனுத் தாக்கல் செய்தார். இம்மனு 8.7.2020 அன்று வழக்கு எண் வழங்கப்பட்டு, 09.07.2020 அன்று விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது. இம்மனு வில் சாத்தான்குளம் தந்தை, மகன் இரட்டை கொலை வழக்கில் சிறப்பு புல னாய்வுக்குழு அமைத்து விசாரணை நடத்தவேண்டும். ஜெயராஜ், பென் னிக்ஸ் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். காவல் துறையினரால் கைது செய்யப் பட்டவர்களுக்கு மருத்துவ தகுதி சான்றிதழ் வழங்குவது சம்பந்தமாக நீதிமன்றம் வகுக்கும் விதி முறைகளை தமிழக அரசும், காவல்துறையும், சிறைத்துறையும் பின்பற்ற உத்தர விட வேண்டும் என மனுவில் தெரி விக்கப்பட்டுள்ளது. 

இதனை ஏற்றுக்கொண்ட உயர்நீதி மன்ற மதுரைகிளை இதற்கு அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது. இவ்வழக்கில் வழக்கறிஞர்கள் சாஜிசெல்லன், சீனி வாசராகவன், மோகன்காந்தி,சுப்பு முத்துராமலிங்கம் ஆகியோர் ஆஜரா கினர்.  இந்நிலையில் இக்கொலை வழக்கில் கைதாகி மதுரை சிறையில் உள்ள காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் இருவ ரும் ஜாமீன் கோரி தூத்துக்குடி நீதி மன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ள னர். இதற்கு தனது தரப்பு ஆட்சே பணை வாதங்களையும், கேட்க வேண் டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாவட்ட செயலா ளர் கே.எஸ்.அர்ச்சுனன் மனுத்தாக்கல் செய்துள்ளார். இவ்வழக்கில் வழக்க றிஞர் இ.சுப்புமுத்துராமலிங்கம் ஆஜ ராகியுள்ளார்.