tamilnadu

மக்கள் நல கோரிக்கைகளை புறக்கணிக்கும் பாஜக - என்.ஆர்.காங்கிரஸ் அரசுக்கு சிபிஎம் கண்டனம்

 மக்கள் நல கோரிக்கைகளை புறக்கணிக்கும்  பாஜக - என்.ஆர்.காங்கிரஸ் அரசுக்கு  சிபிஎம் கண்டனம்

புதுச்சேரி, ஜூலை 1- புதுச்சேரியில் கடந்த நான்கு ஆண்டுகளாக ஆட்சி செய்து வரும் பாஜக-என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி அரசு, மக்கள் எதிர்கொள்ளும் அடிப்படைப் பிரச்சனைகளைத் தீர்ப்பதில் தோல்வி அடைந்துள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புதுச்சேரி மாநிலச் செயலாளர் எஸ். ராமச்சந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.  இதுகுறித்து அவர் வெளி யிட்டிருக்கும் அறிக்கையில், “அடுத்த சட்டமன்றத் தேர்தலுக்கு ஒரு வருடமே எஞ்சியுள்ள நிலையில், அர்த்தமுள்ள அரசியல் நகர்வுகளில் ஈடுபட்டு மக்க ளின் வரிப்பணத்தை விரயம் செய்வதை கட்சி வன்மையாக கண்டித்துள்ளார். ஏற்னெவே, உள்ள பாஜக நிய மன சட்டமன்ற உறுப்பினர்களை மாற்றி, புதிய உறுப்பினர்களை நியமனம் செய்வது வெறும் அரசியல் நெருக்கடி யில் இருந்து திசை திருப்பும் நாடகமே என்றும் ராமச்சந்திரன் கடுமையாக சாடியுள்ளார். சமூக நீதியின் மீதான தாக்குதல் என்.ஆர்.காங்கிரஸ் அமைச்சர் சந்திர பிரியங்கா நீக்கப்பட்டதும், பாஜக அமைச்சர் சாய் சரவணகுமார் மாற்றப்பட்டதும், இருவரும் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. புதிய அமைச்சரவை தலித் பிரதிநிதித்துவம் இன்றி மாற்றப்படலாம் என்ற அச்சம் வலுத்துள்ளது.  அவல நிலை இந்நிலையில், புதிதாக பதவி ஏற்க உள்ள அமைச்சர் மீது ஏற்கெனவே இரண்டு கிரிமினல் வழக்குகள் நிலு வையில் இருப்பதும், கோவில் நில மோசடி மற்றும் கள்ள லாட்டரி சீட்டு போன்ற சமூக விரோதச் செயல்பாடு களில் ஈடுபட்டவர் என்பதும் அதிர்ச்சி யளிக்கிறது என்றும் முதல்வர் என்.ரங்கசாமி தன்னுடைய பதவி நாற்காலியைக் காப்பாற்றிக் கொள்வ தற்காக இத்தகைய அநாகரிக அரசியல் நடவடிக்கைகளுக்கு உடந்தையாக இருப்பது கண்டிக்கத்தக்கது என்றும் தெரிவித்திருக்கிறார்.