மதுரை, டிச.18- மதுரை கிழக்கு சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட வீரபாண்டி ஊராட்சியில் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் சிறப்பு கால்நடை பராமரிப்பு மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது. அமைச்சர் பி.மூர்த்தி கலந்து கொண்டு முகாமை தொடங்கிவைத் தார். ஆட்சியர் அனிஷ்சேகர் தலைமை வகித்தார். பின்னர் அமைச்சர் பி.மூர்த்தி செய்தி யாளர்களிடம் கூறியதாவது:- ஜல்லிக்கட்டு போட்டி களில் நாட்டு மாடுகள் மட்டுமே அனுமதிக்கப்படும். இந்தாண்டு அலங்காநல் லூர், பாலமேடு, அவனியா புரம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் ஜல்லிகட்டு நிகழ்ச்சியில் நாட்டு இன மாடுகள் மட்டுமே கலந்து கொள்ள முடியும். கலப்பின மாடுகள் கொண்டு வருவோருக்கு டோக்கன் கொடுக்க மாட்டோம் என்றார். நாட்டு மாடுகளை ஊக்குவிக்க கால்நடை மருத்துவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.