ஓர் உறுதிமிக்க இயக்கப் போராளி, மிகுந்த கனிவான தோழமைப் புன்னகை பூக்கும் முகத்தி னராகவும் வாய்த்தல் எப்பேற்பட்ட இன்பம். ‘தன்னை மறந்தால் உண்மை யில் இன்பம், சுயநலம் மறந்தால் பெரும்பேரின்பம்’ என்ற வரிகள் ஜேபி சந்திரபாபு திரைப்பாடலில் வருவது. உன்னதமான மனித நேயராக அறி யப்பட்டிருந்தார் வி.என்.ராகவன். அவ ரது மறைவில் இன்னும் புதிய உயரம் தொட்டது அவரது வாழ்க்கைத் தத்து வம். பழுத்த வைதீக ஆச்சாரக் குடும் பத்தின் வழித்தோன்றல், சமஸ்கிருத புலமையும், வைணவ இலக்கிய வாசிப்பும் மிகுந்திருந்தவர் கடந்த ஆண்டு ஜூலை 18 அன்று இயற்கை எய்திய போது, சமயச் சடங்குகள் எது வும் மேற்கொள்ளாது செங்கொடி போர்த்தி செவ்வணக்கம் செலுத்தி அவ ருடலை எரியூட்ட மார்க்சிஸ்ட் கட்சி பொறுப்பேற்றுக் கொள்ளக் கேட்டுக் கொண்டு, தாங்களும் உடன் வந்து நின்ற குடும்பத்தை விட்டுச் சென்றிருந் தார் ராகவன். அறிவியல் தொழில்நுட்ப மேம்பாட் டைத் தமது உந்துசக்தியின் விசையால் உள்வாங்கிப் புதிய சாதனங்கள் கண் டால் உடன் பயணம் சென்று பயன் படுத்திக் கொள்ளும் நேர்த்தி பெற்றி ருந்தார் தொண்ணூறு வயதிலும் என்று எழுதுகிறார் அவருடைய பேரன் ரிஷி கேஷ். ஒன்றல்ல இரண்டல்ல, இருபது புத்தகங்கள் ஒரு மூச்சில் வாசித்துக் கொண்டிருந்தார் மின் வடிவில் என்கி றார் அவருடைய மகன் பாலாஜி. தீவிர புத்தகங்களை வேக வாசிப்பு மட்டு மல்ல, சுருக்கமான குறிப்புகளும் எழுதி அனுப்பி வருவாராம். இன்னொரு முனையில், கொள்ளு பேத்தி அதுல்யா பல்டி போடுவதன் காணொலியை வாட்ஸ் அப்பில் பகிர்ந்து கொண்டிருக் கும் குழந்தைமை உள்ளம். வேலூர் கோட்டத்தின் அஞ்சல் துறை ஊழியர்கள் தங்களை வேவு பார்க்கும், காவல் துறை வைத்து வேட்டையாடும் அன்றைய மத்திய அர சின் கண்களில் பொடி தூவி, வள்ளி மலைக் காடுகளில் ஒளிந்து இருந்து போராடியது என்றால் இன்றைய தலை முறை எளிதில் நம்புமா? 1960களின் அந்தப் போராட்டத்தில், தலை மறை வாக இருந்த தோழர்களின் தொடர்பு அச்சாக இயங்கியவர் வி.என்.ராக வன் என்கிற செய்திகள் கேட்கும் போதே சிலிர்க்கிறது. பின்னாளில், பணி நிறைவுக்குப் பின் தீக்கதிர் அலுவலகத்தில் அமர்ந்து பணியாற்றும் நேர்த்தியும், சக தோழர் களைச் சட்டென்று கவர்ந்து விடும் காந் தம் போன்ற பண்பாக்கமும் அவருக்கு வாய்த்தது எத்தனை அசாத்திய விஷ யம்! ஒரு ஃப்ளாஸ்க் நிறைய காஃபி அருந்துவார் அவர், இரத்த சோத னைக்கு சாம்பிள் எடுத்தால் இரத்தம் வராது, காஃபி துளிகள் தான் கிடைக் கும் என்று கிண்டல் செய்வேன் என்று சொல்லும் டாக்டர் வர்ஷா, இந்த காஃபி அவருக்குப் போதுமானதாக இருந்தது தீக்கதிர் அலுவலகம் சென்ற தும், அறிவுத் தளத்தில் பல நுட்பமான உரையாடல்களையும் விவாதங்களை யும் நடத்துவதற்கு என்கிறார்.
காரசாரமான விவாதங்கள், கருத்து மாறுபாடுகள் உரசிப் பற்றிக் கொண்டா லும், பின்னர் அவரே தேநீர் கடைக்கு அழைத்துச் செல்வதும் நடக்கும் என்கி றார் தீக்கதிர் முன்னாள் ஆசிரியர் சு.பொ. அகத்தியலிங்கம். மனத்துக்கண் மாசற்றவர் என்று எழுதுகிறார் தோழர் வே மீனாட்சிசுந்த ரம். எப்பேற்பட்ட உயர்ந்த விவரிப்பு! கூர்ந்த நோக்கும் தொலை நோக்குப் பார்வையும் அவரது சிறப்பம்சம் என்கி றார் எழுத்தாளர் கமலாலயன். இரட்டையர் எழுதிய ஆங்கில நூலைத் தமிழில் நள்ளிரவில் சுதந்திரம் என்று இரட்டையராக அவரோடு இணைந்து மொழி பெயர்த்து விருதும் பெற்ற இன்பம் சுவைக்கிறது தோழர் மயிலை பாலு மொழியில்! தொழிற்சங்க ஆவேசப் போராளி மார்க்சிய சிந்தனையாளராக உருப் பெற்றதும், வாசிப்பும் எழுத்தும் அவ ரது இயங்கு தளத்தை விரிவுபடுத்திய தும், பன்முக ரசனை - பன்முகத் தேட லின் அருமையான அனுபவங்களை அவர் இயக்கப் பணிகளில் இழைத்துக் கொடுத்ததும் மிகவும் சிறப்பாக அம் சங்களாகும். வி.என்.ராகவன், இன்றைய தலை முறை தொழிற்சங்கத் தோழர்கள் அறிந்து கொள்ள வேண்டிய பெயர். வாசித்தும் கேட்டும் அறிந்து கொண் டாட வேண்டியது அவரது வாழ்க்கை! ஜூலை 18, தோழர் வி.என்.ராகவன் நினைவு நாள், ஜூலை 31 அவரது நினைவில் வெளியாகிறது சிறப்பு மலர் எஸ்.வி.வேணுகோபாலன்