tamilnadu

வாங்கம்மா வாங்க! 


வசனம் 

தயிரோ... தயிரு தயிரோ... தயிரு 
வாங்கம்மா வாங்க
வாங்கிட்டு போங்கம்மா  
நல்ல தயிரு... 

பாடல் 
வாங்கம்மா வாங்க தயிரு வாங்க ஜிஎஸ்டி 
இல்ல வாங்கிட்டு போங்க 
வாங்கும் பொருளு 
அத்தனைக்கும் 
வரிகளை போடுறான் தலைமேல்-செத்த 
பொணத்துல வண்டி 
ஏற்றி அதுக்கும் போடுவான் 
ஜிஎஸ்டி 
(வாங்கம்மா...) 
ஒட்டாறம் பிடிக்காம
வாங்கிட்டு போங்க 
நல்ல தயிரு நாட்டு நயிரு - குளிர் 
சாதனப் பெட்டியில் நொந்து கிடந்த எட்டு 
மாசத்து பண்டமில்ல-அந்த
அம்பானிக்கு அது
சொந்தமில்ல - தம்பி 
அதானிக்கும் அதில் பங்குமில்ல 
(வாங்கம்மா...)
பாலுக்கும் வரிய
போட்டுப்புட்டான் மாட்டு மகரத்தான் 
உஷ்சாரா பாத்துக்கங்க
கோமியம் குடிக்க குண்டான எடுத்து 
பிஜேபி வருவான் பாத்துக்கங்க-அதுக்கும் 
ஜிஎஸ்டி வரி கட்ட சொல்லுவாங்க-பிறகு 
வரி உயர்வுன்னு சொல்லுவாங்க 
(வாங்கம்மா) 
- எம்.ரமேஷ் 
தியாகி, என்.வி.கலைக்குழு, தஞ்சை

 

;