tamilnadu

img

சிஐடியு சாலைப் போக்குவரத்து சங்க மாநில மாநாடு வரவேற்புக்குழு அமைப்பு

சிஐடியு சாலைப் போக்குவரத்து சங்க மாநில மாநாடு வரவேற்புக்குழு அமைப்பு

சேலம், ஆக. 4- சாலை போக்குவரத்து தொழிலா ளர் சம்மேளனம் (சிஐடியு) மாநில மாநாடு வரவேற்புக் குழு அமைப்பு  கூட்டம் சேலம் சிஐடியு மாவட்டக் குழு  அலுவலகமான விபி சிந்தன் நினை வகத்தில் திங்களன்று நடைபெற் றது. தமிழ்நாடு சாலை போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனம் (சிஐ டியு) ஆறாவது மாநில மாநாடு சேலத் தில் வரும் செப்டம்பர் மாதம் 28,29 ஆம் தேதிகளில் சேலம் கேஎம்பி மண்டபத்தில் நடைபெற உள்ளது. மாநாட்டை வெற்றிகரமாக நடத்து வது குறித்த வரவேற்பு குழு அமைப்பு  கூட்டம் சேலம் சிஐடியு மாவட்ட குழு அலுவலகத்தில். நடைபெற்றது. மாநாட்டு நோக்கங்கள் குறித்து மாநிலத்தலைவர் ஆறுமுக நயினார்,  மாநில செயலாளர் குப்புசாமி, மாநில துணைத் தலைவர் எஸ். கே.தியா கராஜன் நிர்வாகி எஸ். மூர்த்தி ஆகி யோர் பேசினர். நடைபெற்ற வர வேற்பு குழு கூட்டத்தில் சிஐடியு மாவட்ட செயலாளர் ஏ. கோவிந்தன்  பி. பன்னீர்செல்வம் உள்ளிட்டு சாலை  போக்குவரத்து தொழிற்சங்க நிர்வா கிகள் பங்கேற்றனர். இதில், மாநாட்டு வரவேற்பு குழு  தலைவராக எஸ். கே. தியாகராஜன்,  செயலாளராக பி.முருகேசன், பொரு ளாளராக வி. இளங்கோ உள்ளிட்டு 65  பேர் கொண்ட வரவேற்பு குழு தேர்வு  செய்யப்பட்டது.