சென்னை,செப்.28- ‘யூனி பிரஸ்’ நிறுவனத் தின் சட்டவிரோத கத வடைப்பு விவகாரத்தில் தமி ழக அரசு தலையிட வேண் டும் என்று சிஐடியு கோரிக் கை விடுத்துள்ளது. இதுகுறித்து சிஐடியு மாநி லத் தலைவர் அ.சவுந்தரரா சன் வெளியிட்டுள்ள செய் திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது: தமிழ்நாடு காஞ்சிபுரம் மாவட்டம், வல்லம் சிப்காட் டில் உள்ள யூனிபிரஸ் என் கிற கார் உதிரிபாக தொழி ற்சாலையில் பணியாற்றும் தொழிலாளர்கள் சிஐடியு சங்கத்தில் இணைந்தனர். இது அவர்களின் உரிமை. பல தொழிற்சாலைகளின் முன்பு உள்ளது போல இங்கும் தொழிலாளர்கள் கொடியேற்றினர். ஆனால், அந்த கொடியையும், பெயர்ப்பலகையையும் புல் டோசர் வைத்து சிப்காட் நிறு வனம் மூலம் அகற்றியுள்ள னர். இது தொழிலாளர்களின் சங்கம் அமைக்கும் உரிமை மற்றும் கூட்டு பேர உரிமை க்கு எதிரான மோசமான நட வடிக்கையாகும். அடுத்த நாள் (17.8.23) தொழி லாளர்கள் தங்களது சங்கக் கொடியை மீண்டும் உயர்த்தி னார்கள். ஆனால், வேலைக்குச் சென்ற தொழிலாளர்களை நிர்வாகம் வேலைக்கு அனு மதிக்கவில்லை. நிரந்தர மற்ற தொழிலாளர்களை வைத்து சட்ட விரோதமாக ஆலையை இயக்கி வரு கின்றனர். இது நிரந்தர தொழி லாளர்களுக்கு எதிரான சட்ட விரோத கதவடைப்பு ஆகும். தொழிலாளர் துறை யில் பேச்சுவார்த்தை நிலுவை யில் உள்ளது.
இதில் ‘யூனி பிரஸ்’ நிர்வாகம் கலந்து கொள்ள மறுக்கிறது. தொழி லாளர்கள் வேலைக்கு வரும் போது அதை நிறுவனம் தடுக்கக்கூடாது என்றும், வேலைக்கு அனுமதியுங்கள் என்றும், தொடர்ந்து சமரச பேச்சுவார்த்தையில் பங்கெ டுங்கள் என்றும் தொழிலாளர் துறை கூறியுள்ளது. 27.9.23 அன்று தொழிலாளர் துறை ஆணையரே பேச்சு வார்த்தைக்கு அழைத்தார். அதிலும் அவர்கள் கலந்து கொள்ளவில்லை. இதற்கிடையில் செப்டம் பர் 28 அன்று ஆலை வாயி லில் அமைதியாக உண்ணா விரதம் இருந்த தொழிலா ளர்களையும், தொழிற்சங்க தலைவர் இ.முத்துக்குமாரை யும் காவல்துறை கைது செய்துள்ளது. மனிதச்சங் கிலி போராட்டம் நடத்தவும் அனுமதி மறுத்து பெரும் அடக்குமுறை ஏவப்படுகிறது. அரசின் தொழிலாளர் துறையை மதிக்காமலும், தொழிலாளர்களை பட்டினி போட்டு துன்புறுத்தி கட்டாய அடிமை சாசனம் போட முயற்சிக்கும் தொழிற் சாலையின் சட்டவிரோத நட வடிக்கைக்கு காவல்துறை முட்டுக் கொடுக்கிறது. இந்த போக்குவன்மையான கண்டனத்துக்குரியது. எனவே கைது செய்த வர்கள் அனைவரையும் அரசு விடுதலை செய்ய வேண்டும். அமைதி வழி போராட்டங்களை ஒடுக்க காவல்துறையை ஏவக்கூடாது. இதில் உடனே தமிழ்நாடு அரசும், அமைச்சர்களும் குறிப்பாக முதல்வர் அவர் களும் தலையிட்டு தொழி லாளர்களின் உரிமையை பாதுகாக்க வேண்டும்.