சிஐடியு கரூர் மாவட்ட 10 ஆவது மாநாடு
கரூர், ஜூலை 27- சிஐடியு கரூர் மாவட்ட 10 ஆவது மாநாடு க.பரமத்தியில் ஜூலை 27, 28 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. முதல் நாளான ஜூலை 27 ஆம் தேதி மாலை க.பரமத்தி அரசு மேல்நிலைப் பள்ளி அருகில் சிஐடியு மாவட்ட தலைவர் ஜீவானந்தம் தலைமையில் துவங்கிய பேரணியை, கரூர் மாவட்ட மூத்த தொழிற்சங்க தலைவர் ஜி. இரத்தினவேலு கொடி அசைத்து துவக்கி வைத்தார். மாவட்டச் செயலாளர் சி.முருகேசன் முன்னிலை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை, கட்சியின் கரூர் மாவட்டச் செயலாளர் மா.ஜோதிபாசு, சிஐடியு சங்க மாநிலச் செயலாளர் எம். ஐடா ஹெலன், மாநாட்டு வரவேற்புக் குழு தலைவர் கே.கந்தசாமி, செயலாளர் சி.ஆர். ராஜாமுகமுது, கட்சியின் க.பரமத்தி ஒன்றியச் செயலாளர் கா.கந்தசாமி, மாவட்ட துணைத் தலைவர் எம்.சுப்பிரமணியன், மாவட்டப் பொருளாளர் ப.சரவணன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உட்பட 500-க்கும் மேற்பட்டோர் பேரணியில் கலந்து கொண்டனர்.