tamilnadu

img

உயிரிழந்த தொழிலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தி சிஐடியு கோரிக்கை முழக்கம்

உயிரிழந்த தொழிலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தி  சிஐடியு கோரிக்கை முழக்கம்

சின்னக்காமன்பட்டி பட்டாசு ஆலை விபத்து 

சிவகாசி, ஜூலை 7- விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே சின்னக்காமன்பட்டியில் உள்ளது கோகுலேஷ் பட்டாசு ஆலை. இங்கு, கடந்த ஜூலை 1ஆம்  தேதி வெடி விபத்து ஏற்பட்டது. இதில் ஒரு பெண் உட்பட 10 தொழிலாளர் கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.   உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு பசுமைத் தீர்ப்பாய உத்தரவுப்படி தமிழக அரசு ரூ.20 லட்சமும், ஆலை நிர்வாகம் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வின் உத்தரவுப்படி ரூ.10 லட்சம் வழங்கக் கோரி சிஐடியு-பட்டாசு தீப்பெட்டி தொழிலாளர் சங்கத்தின் சார்பில் தொடர் போராட்டம் நடைபெற்றது.  இந்நிலையில், ஜூலை  7 திங்களன்று திருத்தங்கல்லில், உயி ரிழந்த பட்டாசு தொழிலாளர்களின் உருவப்படங்களுக்கு மலர் தூவியும், மெழுகுவர்த்தி ஏற்றியும் அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்பு,  கோரிக்கை முழக்கப் போராட்டம்  நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாநகர் செயலாளர் கே.பாப்பா உமாநாத் தலைமையேற்றார். துவக்கி வைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே. அர்ஜூனன் பேசினார்.  கோரிக்கைகளை விளக்கி சிஐடியு மாவட்டத் தலைவர் எம்.மகாலட்சுமி, பட்டாசு சங்க மாவட்ட பொதுச் செயலாளர் எம்.சி.பாண்டி யன், சிபிஎம் சிவகாசி மாநகர செய லாளர் ஆர்.சுரேஷ்குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.முருகன்,  வடக்கு ஒன்றியச் செய லாளர் கே.ராஜேந்திரன் ஆகியோர்  பேசினர். முடிவில் சிஐடியு மாவட்டச் செயலாளர் பி.என்.தேவா  கண்டன உரையாற்றினார்.  மேலும் இதில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஆ.குருசாமி, சிஐடியு மாவட்ட பொருளாளர் வி.ஆர்.செல்லச்சாமி ஆகியோர்  உட்பட பலர் பங்கேற்றனர்.   அவலம் தீர வேண்டும்  போராட்டத்தில் சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் கே.அர்ஜூ னன் கூறியதாவது: பட்டாசு ஆலை வெடி விபத்து களால் சிவகாசியைச் சுற்றிலும் அவ லக்குரல் கேட்டுக் கொண்டே இருக் கிறது. பட்டாசுத் தொழிலை பாது காப்பாகவும், விபத்து, உயிரிழப்பு கள் ஏதும் இன்றியும்  நடத்த வேண்டுமென சிஐடியு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.   ஆனால், உற்பத்தியாளர்களின்  லாப வெறி காரணமாகவே வெடி விபத்துகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. போதிய பயிற்சி பெறாத வர்களை வேலை செய்ய வைப்பது, பல மணி நேரம் தொழிலாளர்களை வேலை செய்ய நிர்பந்திப்பது, பல்வேறு விதிமுறை மீறல்கள் போன்ற காரணங்களால் தொடர் வெடி விபத்துகள் நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன.   கீழத்தாயில்பட்டியில் உள்ள ஹிந்துஸ்தான் பட்டாசு ஆலையில் ஞாயிறு  விடுமுறை தினத்தில் வேலை வைத்துள்ளனர். இதனால், வெடி விபத்து ஏற்பட்டு தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார்.   கடுமையான விலைவாசி உயர்வு உள்ளிட்ட காரணங்களால் குடும்ப வருமானம் போதவில்லை. எனவே, வாங்கிய கடனை திரும்ப கட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் கணவன், மனைவி இருவரும் வேறு வழியின்றி, பட்டாசு ஆலை களுக்கு வேலைக்குச் செல்கின்றனர்.   ஆனால், தீராத துயரமாய் பட்டாசு ஆலைகளில் தொடர்ந்து வெடி விபத்துகளால் உயிர் பலி ஏற்படுகிறது. கணவனை இழந்து மனைவியும், மனைவியை இழந்து கணவனும், தாய் தந்தையை இழந்து குழந்தைகளும் தவிக் கின்ற நிலை ஏற்படுகிறது.   பட்டாசு விபத்துகளில் தாய்,  தந்தையரை இழந்து வாடும் குழந்தைகளின் கல்விச் செலவு களை அரசே ஏற்க வேண்டுமென சிஐடியு தொடர்ந்து போராடி வந்தது. இதையடுத்து, தமிழக அரசு அக்கோரிக்கையை ஏற்று நிதி வழங்கி வருகிறது. அதேவேளை வெடி விபத்து களில் உயிரிழந்த தொழிலாளர் களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வேண்டுமெனவும் சிஐடியு தொடர்ந்து போராடியதால் ரூ.5.50 லட்சம் வழங்கப்படுகிறது. ஆனால், கடந்த 8 ஆண்டுகளுக்கு மேல் இதே தொகை வழங்கப்படு கிறது. எனவே, அதை உயர்த்தி ரூ.10  லட்சமாக வழங்க வேண்டுமென சிஐ டியு போராட்டம் நடத்தி வருகிறது. நீதிமன்றங்கள் தலையிட்டு   உத்தர விட்ட பின்பே ஆலை நிர்வாகம்  ரூ.10 லட்சம் வழங்குகிறது.   ஆனால், தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்ட ரூ.20 லட்சத்தை அரசு நிர்வாகம் வழங்கத் தயார் இல்லை.  மனித உயிர்கள் மகத்தானவை. அவை விலை மதிக்க முடியாதவையாகும்.   செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம் வளர்ந்த போதும், விபத்தில்லாமல் பட்டாசு தொழிலை நடத்த முடியவில்லை. இதில் ஆட்சியாளர்கள் அக்கறை செலுத்த வேண்டும். உற்பத்தியாளர்கள் லாபம் ஒன்றையே இலக்காக வைத்து ஆலைகளை நடத்தி வருகின்றனர். இந்நிலை மாற வேண்டும்.   பாதிக்கப்பட்ட தொழி லாளர்களின் குடும்பங்களுக்கு சட்டப்படியான உரிமைகள் கிடைக்கும் வரை சிஐடியு தொடர்ச்சி யான போராட்டங்களை நடத்தும்.   இவ்வாறு அவர் தெரிவித்தார்.