tamilnadu

img

கொளத்தூரில் முதலமைச்சர் வேட்பு மனு தாக்கல்!

கொளத்தூரில்  முதலமைச்சர் வேட்பு மனு தாக்கல்!

சென்னை, மார்ச் 30 - தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் முதலமைச்சரும் திமுக தலை வருமான மு.க. ஸ்டாலின் திங்கட்கிழமை தமது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். செம்பியம் பேப்பர் மில்ஸ் சாலையில் அமைக்கப் பட்டுள்ள தேர்தல் அலுவல கத்தில் தேர்தலை நடத்தும் அதிகாரி சாந்தியிடம் தமது  வேட்பு மனுவை முதலமைச் சர் தாக்கல் செய்தார். தேர்தல் ஆணையம் அனுமதித்த குறைந்தபட்ச நபர்களுடன் விதிமுறை களுக்கு உட்பட்டு தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்த முதலமைச்சர், இந்நிகழ்ச்சிக்குப் பின், திறந்த வெளி வாகனத்தில் ஊர்வல மாக சென்று தொகுதி மக்க ளிடம் ஆதரவு திரட்டினார்.  கட்சித் தொண்டர்களும் கூட்டணி கட்சியினரும் கொளத்தூர் தொகுதி மக்களும் முதலமைச்ச ருக்கு உற்சாக வரவேற் பளித்தனர். இந்த நிகழ்வின்போது, கடந்த ஐந்தாண்டு காலத் தில் கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் நிறைவேற்றப் பட்ட திட்டங்கள் குறித்த புத்தகத்தை முதலமைச்சர் வெளியிட்டார்.  எங்கள் கூட்டணி  அமோக வெற்றி பெறும் செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்வி களுக்கும் பதில் அளித்த முத லமைச்சர் மு.க. ஸ்டாலின், “இந்த தேர்தலில் எத்தனை முனை போட்டியாக இருந்தாலும் எங்கள் கூட்டணி அமோகமாக வெற்றி பெறும்! எங்கள் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்குத்தான் மக்கள்  வாக்களிப்பார்கள். இதனால், 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது” என்றும் கூறினார்.