tamilnadu

img

காவலர் நினைவு சின்னத்தில் முதல்வர் மரியாதை!

காவலர் நினைவு சின்னத்தில் முதல்வர் மரியாதை!

சென்னை, அக். 21 - காவலர் வீரவணக்க நாளையொட்டி, சென்னை காவல் துறை தலைமையக வளாகத்தில் உள்ள காவ லர் நினைவுச் சின்னத்தில், முதலமைச்சர் மு.க. ஸ்டா லின் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தி னார். 1959ஆம் ஆண்டு அக்டோபர் 21 அன்று லடாக்- கின் ஹாட் பிரிங்ஸ் என்ற  இடத்தில் சீன ராணுவத்தினர் மேற்கொண்ட திடீர் தாக்குத லில் 10 மத்திய பாது காப்புப் படைக் காவலர்கள் உயிரிழந்தனர். கடல் மட்டத்திலிருந்து 16 ஆயிரம் அடி உயரத்தில் வீர மரணம் அடைந்த அந்த காவலர்களின் தியாகத்தை நினைவு கூறும் வகை யிலும், பணியின் போது வீர மரணம் அடைந்த போலீசாருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும் ஆண்டுதோறும் அக்டோ பர் 21 அன்று காவலர் வீர வணக்க நாள் கடைப்பிடிக்கப் பட்டு வருகிறது. அதனடிப்படையிலேயே சென்னையில் முதலமைச் சர் காவலர் நினைவுச் சின்னத்திற்கு மரியாதை செலுத்தினார். மேலும், மரக்கன்று ஒன்றையும் நட்டு வைத்த முதலமைச்சர், காவல்துறை யில் கருணை அடிப்படை யில் சேர்ந்தவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். நிகழ்ச்சியில் தமிழ்நாடு பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமன், மேற்குவங்க முன்னாள் ஆளுநரும் தேசியப் பாதுகாப்பு முன்னாள் ஆலோசகருமான எம்.கே. நாராயணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.