மதுரை, அக். 21- இந்தியக் கடற்படையினரால் சுடப்பட்ட தமிழக மீனவருக்கு நிவாரணம் மற்றும் சிறப்பான சிகிச்சை அளிக்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தர விட்டுள்ளார். மயிலாடுதுறை மாவட்டம் ,மானனகிரி கிராமத்தைச் சேர்ந்த மீனவர் வீரவேல் என்பவர் கடலில் மீன்பிடிக்கச் சென்ற போது வெள்ளியன்று இந்திய கடற்படை யினரால் சுடப்பட்டு பலத்த காயமடைந் தார். இவர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார் . சிகிச்சை பெற்று வரும் மீனவர் வீரவேலுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தர விட்டுள்ளதோடு , அவருக்கு முதலமைச் சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.2 இலட்சமும் வழங்க உத்தரவிட்டுள்ளார். அதனை தொடர்ந்து வெள்ளியன்று மாலை மீன்வாளத்துறை அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன் மீனவரை சந்தித்து ஆறுதல் கூறினார். மதுரை நாடாளுமன்ற உறுப்பி னர் சு.வெங்கடேசனும் மீனவருக்கு ஆறுதல் கூறினார். மீனவர் குடும்பத்தினரிடம் நிவார ணத்தொகையை அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன் வழங்கினார். அமைச்சர் பி.மூர்த்தி, சட்டமன்ற உறுப்பினர் ஏ. வெங்க டேசன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.