வெற்றி நிச்சயம் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்
சென்னை, ஜூலை 1 - ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற “நான் முதல்வன்” திட்டத்தின் மூன்றாண்டு வெற்றி விழாவில் கலந்து கொண்டு, “வெற்றி நிச்சயம்” திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை (ஜூலை 1) தொடங்கி வைத்தார். இந்த விழாவில் பேசிய முதலமைச்சர், “கடந்த மூன்று ஆண்டுகளில் நான் முதல்வன் திட்டத்தின் மூலம் 3.28 லட்சம் பேர் முன்னணி நிறுவனங்களில் வேலை பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார். யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற 57 போட்டித் தேர்வர்களில் 50 பேர் நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு குழந்தையின் வெற்றியையும் தந்தையைப் போல மகிழ்ச்சியுடன் பார்ப்பதாகவும், 18 முதல் 35 வயது வரை உள்ள படித்த வேலையில்லா இளைஞர்களுக்கு திறன் பயிற்சி அளிக்கப்படுவதாகவும் அவர் கூறினார். இந்த இயக்கத்தின் கீழ் தமிழ்நாடு முழுவதும் திமுக நிர்வாகிகள் வீடு வீடாக பொதுமக்களைச் சந்திக்கவுள்ளனர். திமுக கூட்டணியில் கூடுதல் கட்சிகள் இணைய வாய்ப்பிருப்பதாகவும், தேர்தல் தேதி அறிவித்த பிறகு தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடக்கும்” என்றும் அவர் கூறினார். இந்த விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் பி.கே.சேகர்பாபு, உயர்கல்வித் துறை செயலாளர் சங்கர், மக்களவை மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.