tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

துரைமுருகனிடம் முதலமைச்சர் நலம் விசாரிப்பு

சென்னை: சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்  நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் திடீரென மயங்கி விழுந்தார். இதில்  அவருக்கு கையில் காயம் ஏற்பட்ட நிலையில், மயங்கி  விழுந்த அமைச்சர் துரைமுருகனை மீட்டு மருத்துவமனை யில் அனுமதித்தனர். அங்கு அவரை மருத்துவர்கள் பரிசோ தனை செய்ததில் அமைச்சர் துரைமுருகனுக்கு தோள்பட்டை  எலும்பில் லேசான சிராய்ப்பு ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப் பட்டது. தொடர்ந்து லேசான காயம் காரணமாக துரைமுருக னுக்கு கையில் கட்டு போடப்பட்டது. மேலும் மூன்று நாட்கள்  தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மருத்துவமனை யில் இருந்து வீடு திரும்பி ஓய்வு எடுத்து வருகிறார். இந்நிலையில், அமைச்சர் துரைமுருகனை முதல மைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று சந்தித்து உடல்நலம்  குறித்து விசாரித்தார். மேலும் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்தும் கேட்டறிந்தார். முதலமைச்சருடன் அமைச்சர் எ.வ.வேலு உடனிருந்தார்.

செய்தியாளர்களிடம் சீமான் அடாவடி செஞ்சி:

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் நாம் தமிழர்  கட்சியின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில்  அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மேடையில் பேசிக் கொண்டு இருந்தார். இதற்கிடையில், இந்நிகழ்ச்சி யில் செய்தி சேகரிக்க செய்தியாளர்கள் வந்துள்ளனர். அப்போது அங்கிருந்த பாதுகாவலர்கள் அவர்களை அனு மதிக்காமல் தடுத்து நிறுத்தியுள்ளனர். பின்னர் ‘எங்களை அனுமதிக்க வேண்டும்’ என செய்தி யாளர்கள் கூறியுள்ளனர். ஆனால் அவர்கள் விடாப் பிடியாக இருந்தனர். இதனால் செய்தியாளர்களுக்கும், அங்கிருந்த பாதுகாவலர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. அப்போது மேடையில் பேசிக் கொண்டு  இருந்த சீமான் திடீரென ஆவேசமாக கீழே இறங்கி வந்து செய்தியாளர்களிடம் வாக்குவாதம் செய்ய முயற்சித்தார். இதனால் அந்த இடம் சிறிது நேரம் பரபரப்பாக மாறியது.  பின்னர் அங்கிருந்து சீமானை கட்சி தொண்டர்கள் அழைத்துச் சென்றனர். பொதுக்கூட்ட மேடையில் ஆவேசத் துடன் செய்தியாளர்களை தாக்குவது போல் வந்த சீமானின்  நடவடிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திமுக மீண்டும் வெற்றி நெல்லை:

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் நகராட்சித் தலைவர் தேர்தலில் திமுக வேட்பாளர் மீண்டும்  வெற்றி பெற்றார். ஏற்கனவே தலைவராக இருந்த உமா  மகேஸ்வரி, நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் நீக்க  திங்களன்று (ஆக.18) தேர்தல் நடந்தது. இதில் திமுக  கவுன்சிலர் கெளசல்யா, அதிமுக கவுன்சிலர் அண்ணா மலை புஷ்பம் இருவரும் போட்டியிட்ட நிலையில், கெள சல்யா 22 வாக்குகளும், அண்ணாமலை புஷ்பம் 6 வாக்கு களும் பெற்றனர்.

அன்புமணிக்கு நோட்டீஸ் சென்னை:

ராமதாஸ் தலைமையில் நடந்த பாமக  சிறப்பு பொதுக்குழுவில் அன்புமணி மீது 16 குற்றச்சாட்டு கள் சுமத்தப்பட்ட நிலையில், அந்த குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் கேட்டு அன்புமணிக்கு பாமக ஒழுங்கு நடவடிக்கை  குழு சார்பில் தபால் மூலம் நோட்டீஸ் அனுப்பி வைக்கப் பட்டுள்ளது.

விசாரணைக் குழு அமைப்பு சென்னை:

பள்ளிபாளையத்தில் கல்லீரல் விற்பனை குறித்து விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளது. சிறு நீரக முறைகேடு விவகாரத்தை விசாரித்த குழுவே கல்லீரல் விற்பனை புகாரையும் விசாரிக்கும் என தமிழ்நாடு அரசு  தெரிவித்துள்ளது. கல்லீரல் கொடுத்த பெண் தற்போது  உடல் பலவீனமாகி எந்த வேலையும் செய்ய முடியாமல்  இருப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சுகாதாரத்  திட்ட இயக்குநர் வினித் ஐஏஎஸ் தலைமையிலான குழு,  கல்லீரல் திருட்டு பற்றி விசாரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவிரி கரையோர மக்களுக்கு  வெள்ள அபாய எச்சரிக்கை! சேலம்:

கர்நாடக மாநிலத்தின், கபினி மற்றும் கிருஷ்ண ராஜ சாகர் அணைகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு  விநாடிக்கு 70,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்று மாலை 4 மணிக்கு மேட்டூர் அணை  உபரி நீர் போக்கி வழியாக தண்ணீர் திறப்பு விநாடிக்கு 35,000 கன அடியிலிருந்து 50,000 கன அடி  முதல் 70 ஆயிரம் கன அடி வரை அதிகரிக்கப்படவுள்ளது. இதனால், சேலம், ஈரோடு, நாமக்கல், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கரூர், மயிலாடு துறை உள்ளிட்ட 11 காவிரி டெல்டா மாவட்டங்களில் முன்னெச் சரிக்கை நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

விசாரணைக்கு இடைக்கால தடை

புதுதில்லி: 2012-ஆம்  ஆண்டு தொடரப்பட்ட சொத்துக் குவிப்பு வழக் கில் இருந்து அமைச்சர் ஐ. பெரியசாமி, அவரது  மனைவி சுசீலா, மகன்கள் செந்தில்குமார் மற்றும் பிரபு ஆகி யோரை திண்டுக்கல் மாவட்ட ஊழல் தடுப்பு நீதி மன்றம் விடுதலை செய்தது. ஆனால், திண் டுக்கல் மாவட்ட நீதி மன்றம் அளித்த தீர்ப்பை ரத்துசெய்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பி. வேல்முருகன், மறுவிசா ரணைக்கு உத்தர விட்டார். இதனை எதிர்த்து,  ஐ. பெரியசாமி தரப்பில் மேல்முறையீடு செய்யப் பட்டது. இந்த வழக்கு நீதி பதிகள் தீபங்கர் தத்தா தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வில் திங்க ளன்று (ஆக. 18) விசார ணைக்கு வந்தது. அப் போது, சென்னை உயர்  நீதிமன்றத்தின் உத்தர வுக்கு இடைக்காலத் தடை  விதித்தனர்.

குரூப் 2, 2ஏ  தரவரிசை வெளியீடு!

சென்னை: டிஎன்பி எஸ்சி குரூப் 2, 2 ஏ தேர் வில் பெற்ற மதிப்பெண் கள், தரவரிசை விவ ரங்கள் இணையதளத் தில் வெளியிடப்பட்டு உள்ளன. 2-ஆம் கட்ட  மூலச்சான்றிதழ் சரி பார்ப்பு, கலந்தாய்வு ஆகஸ்ட் 29 அன்று தேர் வாணைய அலுவல கத்தில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்ட தேர்வர் களின் பட்டியல் www.tnpsc.gov.in -ல் வெளியிடப்பட்டுள்ளது.

10 நிமிடங்களில் முடிந்த முன்பதிவு சென்னை:

இந் தாண்டு தீபாவளிப் பண் டிகை அக்டோபர் 20  அன்று கொண்டாடப்படு கிறது. இதனையொட்டி ரயில்களில் சொந்த ஊர் களுக்குச் செல்லும் பய ணிகள் தங்கள் பயணச் சீட்டுகளை முன்பதிவு செய்து கொள்வதற்கான முன்பதிவு தேதிகள் அறி விக்கப்பட்டுள்ளன. அதன் படி, அக்.17 அன்று காலை  முன்பதிவு தொடங்கிய நிலையில், 10 நிமிடங்களி லேயே எக்ஸ்பிரஸ் ரயில் களுக்கான டிக்கெட் முன் பதிவு முடிந்தது. நெல்லை,  கன்னியாகுமரி, அனந்த புரி, சேரன், பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில்களில் முன்பதிவு முடிந்தது.

மீனவர்களின் காவல் நீட்டிப்பு கொழும்பு:

கடந்த ஜூலை 27 அன்று எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக பாம்பன் மீன வர்கள் 9 பேர் இலங்கை கடற்படையால் கைது செய் யப்பட்டனர். தற்போது, இலங்கைச் சிறையில் உள்ள தமிழ்நாடு மீன வர்கள் 9 பேரின் காவல்  ஆக.24 வரை நீட்டிக்கப் பட்டுள்ளது.