tamilnadu

img

பீகாரில் தலைமை தேர்தல் ஆணையர், ஆணையர்கள் ஆய்வு

பீகாரில் தலைமை தேர்தல் ஆணையர், ஆணையர்கள் ஆய்வு

243 தொகுதிகளைக் கொண்ட பீகார் மாநிலத்தில் நவம்பர் மாதம் 22ஆம் தேதிக்குள் சட்டமன்ற தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும் என்ற சூழல் உள்ளது. அக்., முதல் வார கணக்கீட்டின் படி பீகார் சட்ட மன்ற தேர்தலுக்கு சரியாக ஒன்றரை மாதம் தான் உள்ளது. இந்நிலையில், பீகார் தேர்தல் ஏற்பாடு பணிகள் தொடர்பாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், ஆணையர்கள் விவேக் ஜோஷி, சுக்பிர் சிங் சந்து ஆகியோர் சனிக்கிழமை அன்று ஆய்வை தொடங்கினர். 2 நாட்கள் (சனி, ஞாயிறு) நடைபெறும் இந்த ஆய்வில் அரசியல் கட்சிகள், காவல்துறை, நிர்வாக அதிகாரிகள் என பல்வேறு தரப்பினருடன் ஆலோசனை நடைபெறவுள்ளது. ஆய்வின் முதல் அம்சமாக சனிக்கிழ மை அன்று மதியம் பீகார் மாநிலத் திற்காக நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் பார்வையாளர்களுடன், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ஆலோசனையில் ஈடுபட்டார். இந்தக் கூட்டத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள், ஐபிஎஸ் அதிகாரிகள், ஐஆர்எஸ், ஐசிஏ எஸ் என மொத்தம் 425 அதிகாரிகள் பங்கேற்றனர்.