tamilnadu

img

தேசிய அளவிலான சிலம்பத்தில் சென்னை மாணவர்கள் பதக்கம் குவிப்பு!

சென்னை,செப்.9- புதுதில்லியில் நடந்த தேசிய அளவி லான சிலம்பம் போட்டியில் சென்னை மாண வர்கள் 20 தங்கம், 11 வெள்ளி, 11 வெண்கலப் பதக்கங்களை வென்றனர். பள்ளி விளையாட்டு மேம்பாட்டு கழகம் சார்பில் புதுதில்லியில் தேசிய அளவிலான சிலம்பம்போட்டிகள் நான்கு நாட்கள் நடைபெற்றன. இதில் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, அரியானா, மகாராஷ்ட்ரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து 500 மாண வர்கள் பங்கேற்றனர். ஒற்றை கம்பு, இரட்டை கம்பு, கம்பு சண்டை, சுருள், வாள், வாள் வீச்சு,வேல் கம்பு  ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடத்தப் பட்டன. கடுமையான போட்டி  நிலவிய சூழ் நிலையில் சென்னையை சேர்ந்த அகத்தி யாவின் சிலம்பக்கூடம் மாணவர்கள் கே. கார்த்திகேயன், எம். தேவதர்ஷன், வி. சாமு வேல் ஜோசப், எஸ். யுகேஷ், ஆர்.பிரேம் குமார், கே. லாவண்யா, எஸ். தேவ தர்ஷினி, எம்.வர்ஷினி ஸ்ரீ, ஜெ. நிதிலா ஸ்ரீ, கே. நித்யஸ்ரீ, எஸ். ஹனிஷா, வி. விஷ்வா, பி. ஹரிணி,எம்.ரோஷன், என்.க்ரிஷ், என். காத்திகேயன்,எஸ்.பிரணவா, ஏ.யாழினி, ஆர். தீரன் முத்தையா, எம். கௌதம் ஆகாஷ், எம். நவீன் கிருஷ்ணன் ஆகியோர் 20 தங்கப் பதக்கமும், தலா 11 வெள்ளி, வெண்கலப் பதக்கங்களையும் குவித்தனர். போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்றும் பதக்கமும் வழங்கப்பட்டன. புது தில்லிக்கு சென்று சிலம்ப போட்டி யில் பதக்கம் வென்று சென்னை திரும்பிய மாணவர்களுக்கு ரயில் நிலையத்தில் மாலை அணிவித்து உற்சாகமாக வரவேற்பு கொடுத் தனர். சிலம்ப கலைக்கூடத்தின் பயிற்சி யாளர்கள் ஜி.ஆர்.முத்துக்குமார், எஸ். தீபா, கே. முருகன், டி. திவ்யா ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.

;