சென்னை,டிச.13- தோழர் என். ராமகிருஷ்ணன் மறைவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு இரங்கல் தெரிவித்திருக்கிறது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:- கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த முன்னோடி தோழர் என். ராமகிருஷ்ணன் டிசம்பர் 12 அன்று காலமானார் என்ற துயரச் செய்தி ஆழ்ந்த வேதனையளிக்கிறது. மூத்த தலைவர் தோழர் என்.சங்கரய்யாவின் சகோதரரான தோழர் என்.ராமகிருஷ்ணன் சிறுவயது முதல் இடதுசாரி அரசியலை முன்னெடுத்தவர். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) நாடாளு மன்றக் கட்சி அலுவலகச் செயலாளராக பணியாற்றியவர். கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வரலாறு பற்றியும், இயக்கத் தோழர்க ளின் வரலாற்றையும் எழுதுவதில் முழு ஈடுபாடு காட்டியவர். இவரது தமிழ், ஆங்கில நூல்கள் கம்யூனிஸ்ட் இயக்க வரலாறு அறிந்து கொள்ள பெரிதும் உதவும். இவை கால காலத்திற் கும் வரலாற்று ஆவணங்களாக திகழும் என்பதில் சந்தேகம் இல்லை. தோழர் என்.ராமகிருஷ்ணன் படைப்புகளும், ஆய்வு முயற்சி களும் பல இளம் படைப்பாளிகளுக்கு வழிகாட்டி உதவும். அவரது மறைவு, இயக்க வரலாற்றை ஆவணப்படுத்தும் துறைக்கு பேரிழப்பாகும். தோழர் என். ராமகிருஷ்ணன் மறைவுக்கு, இந்தியக் கம்யூ னிஸ்ட்கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு ஆழ்ந்த அஞ்சலி தெரிவிப்பதுடன், அவரை பிரிந்து வாடும் தோழர் என்.சங்க ரய்யா உள்ளிட்ட அவரது குடும்பத்தாருக்கும், மார்க்சிஸ்ட் கட்சி தோழர்களுக்கும் ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.