tamilnadu

img

அமைச்சர்கள் மீதான வழக்குகள் கைவிடப்படவில்லை உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல்

அமைச்சர்கள் மீதான வழக்குகள் கைவிடப்படவில்லை  உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல்

சென்னை, செப்.18 - தமிழகத்தில் தற்போது ஆட்சியில் உள்ள அரசியல் கட்சியின் எந்தவொரு அமைச்சர் அல்லது முன்னாள் அமைச்சர் அல்லது சட்டமன்ற  உறுப்பினர் மீதும், முன்னர் வழக்குத் தொடர அனு மதி வழங்கப்பட்டு, அதன் விசாரணை முடிவுக்கு வருவதற்கு முன்பே, வழக்குத் தொடர வழங்கப் பட்ட அனுமதி திரும்பப் பெறப்பட்டு, குற்றவியல் வழக்குகள் கைவிடப்பட்டதாக எந்த வழக்கும் இல்லை என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு பிர மாணப் பத்திரம் தாக்கல் செய்தது. தற்போதைய தமிழக திமுக அரசின் அமைச்சர் களுக்கு எதிராக தமிழ்நாட்டின் பல்வேறு நீதி மன்றங்களில், நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து விசாரிக்கவும் அல்லது அந்த வழக்கு களை சிறப்பு நீதிமன்றத்திற்கோ அல்லது தமிழ கத்திற்கு வெளியே வேறு ஏதேனும் நீதிமன்றத் திற்கோ மாற்ற கோரி உச்ச நீதிமன்றத்தில் தொடரப் பட்டுள்ள பொதுநல வழக்கில் தமிழக அரசு இவ்வாறு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது. இது தொடர்பாக கருப்பையா காந்தி என்ற  வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்  செய்துள்ளார். அந்த மனுவில், “தற்போதைய தமிழக அரசில் நியாயமான விசாரணை நடத்தப் படும் என்ற நம்பிக்கை இல்லை. தற்போதைய தமிழக அரசின் பல்வேறு அமைச்சர்களுக்கு எதிராக கடந்த காலங்களில் இருந்த பல வழக்கு கள் முடிக்கப்பட்டுள்ளன அல்லது அவர்கள் விடு விக்கப்பட்டுள்ளனர். இதற்கு எதிராக மாநில  அரசு ஒருபோதும் மேல்முறையீடு செய்யவில்லை  என்று குற்றம் சாட்டினார். விடுதலை உத்தரவு கள் பிறப்பிக்கப்பட்ட விதம் கடுமையான சந்தேகத்தை எழுப்புகிறது” என்றார். இந்த வழக்கில் தமிழக அரசு 13.9.2025 அன்று  தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், “தமிழ கத்தில் தற்போது ஆட்சியில் உள்ள அரசியல் கட்சி யின் எந்தவொரு அமைச்சர் அல்லது முன்னாள் அமைச்சர் அல்லது சட்டமன்ற உறுப்பினர் மீதும்,  முன்னர் வழக்குத் தொடர அனுமதி வழங்கப்பட்டு,  அதன் விசாரணை முடிவுக்கு வருவதற்கு முன்பே,  வழக்குத் தொடர வழங்கப்பட்ட அனுமதி திரும்பப்  பெறப்பட்டு, குற்றவியல் வழக்குகள் கைவிடப் பட்டதாக எந்த வழக்கும் இல்லை” என கூறி யுள்ளது. இந்த வழக்கு நீதிபதிகள் சூர்யகாந்த், உஜ்ஜல்  புயான் மற்றும் என்.கே. சிங் ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வில் புதன்கிழமை விசா ரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்திற்கு பதில்  அளிக்க மனுதாரர் சார்பில் அவகாசம் கோரப் பட்டதால் விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.