tamilnadu

img

போக்குவரத்துத் தொழிலாளர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருக! சிஐடியு புதுக்கோட்டை மாவட்ட மாநாடு வலியுறுத்தல்

போக்குவரத்துத் தொழிலாளர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருக! சிஐடியு புதுக்கோட்டை மாவட்ட மாநாடு வலியுறுத்தல்

புதுக்கோட்டை, 
அக். 5- 
49 ஆவது நாளாக போராட்டம் நடத்தி வரும் அரசுப் போக்குவரத்துத் தொழிலாளர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில்,  தமிழக அரசு உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என சிஐடியு புதுக்கோட்டை மாவட்ட மாநாடு தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.
இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) புதுக்கோட்டை மாவட்ட 13 ஆவது மாநாடு அக்.4, 5 தேதிகளில் கந்தர்வகோட்டையில் நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை நடை பெற்ற பிரதிநிதிகள் மாநாட்டிற்கு மாவட்டத் 
தலைவர் கே.முகமதலி
ஜின்னா தலைமை வகித்தார். மூத்த தலை வர் எம்.ஜியாவுதீன் கொடியேற்றினார். அஞ்சலி தீர்மானத்தை மாவட்ட துணைத் தலைவர்
சி.மாரிக்கண்ணு வாசித்தார்.
வரவேற்பு குழுத் தலைவரும், கந்தர்வ கோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பி னருமான எம்.சின்னதுரை வரவேற்றுப் பேசினார். மாநாட்டை தொடங்கி வைத்து சங்கத்தின் மாநில உதவி பொதுச் செயலாளர் கே.திருச்செல்வம் உரையாற்றினார். வேலை அறிக்கையை மாவட்டச் செயலாளர் ஏ.ஸ்ரீதர் முன்வைத்தார். வரவு-செலவு அறிக்கையை மாவட்டப் பொருளாளர் எஸ்.பாலசுப்பிரமணியன் வாசித்தார். விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.ராமையன், விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் டி.சலோமி ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்து, மாநிலச் செயலாளர் எம்.ஐடாஹெலன் நிறைவுரையாற்றினார். தலைவராக கே.முகமதலிஜின்னா, செயலாளராக ஏ.ஸ்ரீதர், பொருளாளராக சி.மாரிக்கண்ணு, துணைத் தலைவர்களாக எஸ்.பாலசுப்பிரமணியன், எஸ்.தேவமணி, ஆர்.மணிமாறன், ஏ.ஆர்.பாலசுப்பிரமணியன், கே.எம்.ரேவதி, எம்.தங்கராசு, பி.வீராச்சாமி, கே.நடராஜன், எல்.சிதம்பரம், துணைச் செய லாளர்களாக வி.சரவணன், ஏ.முகமதுகனி, விஜ யலெட்சுமி, வீரமுத்து, பாவேல்குமார், குண சேகரன், லதா, ராஜா, கார்த்திகேயன் ஆகியோர் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர். செயலாளர் கே.கார்த்தி கேயன் நன்றி கூறினார்.
49 ஆவது நாளாக போராட்டம் நடத்திவரும் அரசுப் போக்குவரத்துத் தொழிலாளர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகை யில்  தமிழ்நாடு அரசு உட னடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். மின்சார வாரியத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக வேலை செய்யும் ஒப்பந்தத் தொழிலாளர்களை பணி நியமனம் செய்ய வேண்டும். 60 வயது முடிந்த கட்டுமானத் தொழி
லாளர்களுக்கு ரூ.3,000 ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.